புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர்: கிரியேட்டிவ் அறிமுகம்

Posted By: Staff

புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர்: கிரியேட்டிவ் அறிமுகம்
புளூடூத் இணைப்பு மூலம் இயங்கும் புதிய ஒயர்லெஸ் ஸ்பீக்கரை கிரியேட்டிவ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஸீசவுண்ட் டி5எக்ஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இது ஒரு வயர்லெஸ் மாடலாக இருப்பதால், ஸ்மார்ட்போன், டிவி மற்றும் ஆடியோ சிஸ்டங்களுடன் இணைத்து சரவுண்ட் சவுண்டில் இசையை கேட்டு மகிழலாம்.

இந்த ஸீசவுண்டு டி5X மாடலை ஐபேட்,ஐஃபோன் போன்றவற்றிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது வயர்லெஸ் வகையைச் சேர்ந்ததினால் சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.

42.5சென்டி மீட்டர் X 11 சென்டி மீட்டர் X9 சென்டி மீட்டர் என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸீசவுண்டு டி5எக்ஸ் ஸ்பீக்கர் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கர் பார்ப்பவர்களின் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

மெட்டாலிக் வண்ணத்தில் பளபளக்கும் இந்த ஸ்பீக்கர் பின்புறத்தில் சப் ஊஃபர் கனெக்ட்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 3.5 ஆடியோ இன் ஜேக் மற்றும் மாஸ்டர் பவர் பட்டன் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் மினிமல் டச்சிற்காக கன்ட்ரோல் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

இதன் ஸ்பீக்கரில் கொடுக்கப்பட்டுள்ள உயர்ந்த தொழில் நுட்ப வசதியினால் உங்களுக்கு பிடித்தமான இசையை மிகவும் துல்லியமாகக் கேட்க முடியும். இதில் உள்ள இந்த நவீன தொழில்நுட்பம் வேறெந்த ஸ்பீக்கரிலும் இல்லை.

இதில் உள்ள ஸ்பீக்கரின் பேனல் அமைப்பு ஒரு பாக்ஸின் மீது பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஸ்பீக்கரின் பேனல்கள் தூக்கி நிறுத்துவது போல் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்று இரண்டு ஸ்பீக்ர்களுக்கும் ஒரு பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் ஏப்ட் X என்ற தொழில் நுட்ப வசதி உள்ளதால் மிகவும் சத்தமாகவும், துல்லியமாகவும்,உங்களை சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாத வகையிலும் இதன் பயன்பாட்டை நீங்கள் பெறமுடியும்

இதில் உள்ள புளூடூத் டிரான்ஸ்மிட்டரை, ஆப்பிள் டிவைஸுடன் இணைக்க முடியும். இந்த பிளேயரை பாக்கட்டுக்குள் வைத்துக்கொண்டு உங்களின் அறைக்குள் நடந்து கொண்டே பிடித்தமான இசையைக் கேட்க முடியும். இதில் இன்னும் ஒரு கூடுதல் வசதி என்னவென்றால் டி5X டிரான்ஸ்மிட்டர் வசதி இருப்பதனால் ரிமோட் தேவையில்லை.

இந்த சி சவுன்டு பிளேயரை இதன் டிரான்ஸ்மிட்டருடன் இணைத்துவிட்டால் எளிதில் சார்ஜ் செய்து கொள்ளமுடியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்