கோபத்தை குறைக்கும் கோவோன் மியூசிக் ப்ளேயர்!

By Super
|
கோபத்தை குறைக்கும் கோவோன் மியூசிக் ப்ளேயர்!

எம்பி3 ப்ளேயரின் வருகைக்குப் பின் ஆப்டிக்கல் டிஸ்க் ப்ளேயர்கள் காணாமல் போய்விட்டன. இப்போது எம்பி3 ப்ளேயர்கள் இன்னும் புதுமையான தொழில் நுட்பங்களுடன் வருகின்றன. அந்த ப்ளேயர்கள் பொழுதுபோக்கிற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.

ஒரு சிறந்த தரமான இசையை கேட்க விரும்பினால் கோவோன் வரிசை மியூசிக் ப்ளேயர்களை தேர்ந்தெடுக்கலாம். இந்த போர்ட்டபுள் மீடியா ப்ளேயர்கள் வழியாக கோவோன் நிறுவனம் மக்களுக்கு மிகத் தரமான இசையை வழங்குகின்றன. அதுவும் குறிப்பாக கோவோன் ஜே3 மியூசிக் ப்ளேயர் மூலம் தனது இசைப் பணியைத் தொடர்கிறது.

கோவோன் ஜே3 பார்ப்பதற்கு ஆப்பிள் ஐபாட் டச்சை ஒத்து இருக்கிறது. இது 3.3 இன்ச் கெப்பாசிட்டிவ் தொடுதிரை டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த தொடுதிரை மூலம் இசை பைல்களை தேர்ந்தெடுக்கலாம். இதன் திரையில் வீடியோவையும் பார்க்க முடியும்.

கோவோன் ஜே3 க்ளாஸ் ப்ளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதன் எடை வெறும் 20 கிராம்கள் மட்டுமே. இருந்தாலும் அதிக உறுதியான பேனல்களை கொண்டுள்ளது. இந்த ப்ளேயரின் வலது புறத்தில் இதை இயக்கக்கூடிய பட்டன்கள் உள்ளன.

கோவோன் ஜே3 மியூசிக் ப்ளேயரின் டிஸ்பிளேயின் ரிசலூசன் மிகவும் அருமையாக இல்லையென்றாலும் நன்றாக உள்ளது. இது எல்லா வீடியோ பார்மட்டுகளையும் சப்போர்ட் செய்யாது. மேலும் இதில் முழுமையான படத்தையும் பார்க்க முடியாது. ஆனால் இதில் உள்ள வீடியோ அவுட்புட் மூலம் இதை டிவி அல்லது மானிட்டரில் இணைத்து படம் பார்க்கலாம்.

கோவோன் ஜே2 மியூசிக் ப்ளேயர் தரமான இசையை வழங்குகிறது. இதில் 5 பேண்ட் ஈக்வலைசர் உள்ளது. அதுபோல் இதில் பிபிஇ வசதியும் உள்ளது.

இதர அம்சங்களாக கோவோன் ஜே2 எம்பி3 ப்ளேயர் எப்எம் ரேடியோ ரிக்கார்டரையும் வழங்குகிறது. அதுபோல் இதை வாய்ஸ் ரிக்கார்டராகவும் பயன்படுத்தலாம். இதில் கடிகாரம் மற்றும் காலண்டர் வசதியும் உள்ளது. இந்த கோவோன் ஜே3 மியூசிக் ப்ளேயர் ரூ.13,500லிருந்து ரூ.17,500க்குள் அதன் வசதிகளுக்கேற்ப கிடைக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X