Home
Music

ஸ்பீக்கரில் இவ்வளவு வசதிகளா..!!

By Karthikeyan
ஸ்பீக்கரில் இவ்வளவு வசதிகளா..!!

ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்கான அக்சஸரிகள் ஏராளமாக சந்தையில் குவிந்து கிடக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு ரகத்தில், ஒரு ஸ்டைலில் மற்றும் நவீன தொழில் நுட்பத்தில் வருகின்றன. அந்த வகையில் பியூர் நிறுவனம் ஐபோன் மற்றும் ஐபோடுக்காக ஒரு பிரத்யோக ஸ்பீக்கரை வடிவமைத்திருக்கிறது.

இந்த புதிய ஸ்பீக்கருக்கு கான்டூர் 100ஐ ஐடிவைஸ் ஸ்பீக்கர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த ஸ்பீக்கர் பார்ப்பதற்கு வித்தியாசமாக அதே நேரத்தில் சூப்பராக இருக்கிறது. இந்த ஸ்பீக்கர் ஏராளமான ஐதிங்க்ஸ் மற்றும் நவீன அப்ளிகேசன்களுடன் வருகிறது.

இந்த ஸ்பீக்கர் 20 வாட்ஸ் ஒலியையும் வழங்கக்கூடியது. அதனால் இந்த ஸ்பீக்கரில் அருமையாக இசையைக் கேட்கலாம். அதோடு இந்த ஸ்பீக்கர் எப்எம் வசதியும் கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்பீக்கரோடு ஹெட்போன் ஜாக், அக்சிலியரி போர்ட் மற்றும் ரிமோட் கண்ட்ரோலும் சேர்த்து வழங்கப்படுகின்றன.

இந்த பியூர் ஸ்பீக்கர் ஒரு ஸ்விவலிங் டோக் கொண்டு வருகிறது. அதோடு இன்டர்நெட் ரேடியோவும் இந்த ஸ்பீக்கரில் உண்டு. அதுபோல் இந்த ஸ்பீக்கரில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐடியூன்களிலிருந்து லவுன்ச் அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதோடு இணைப்பு வசதிக்காக இந்த ஸ்பீக்கர் யுஎஸ்பி வசதியும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்பீக்கரை ஆப்பிளின் ஐபோட், ஐபேட் மற்றும் ஐபோன் ஆகியவற்றோடு மிக எளிதாக இணைக்க முடியும். அதுபோல் இந்த ஸ்பீக்கர் சூப்பரான இசை மழையைப் பொழியும் என்று உத்திரவாதம் வழங்கலாம்.

அருமையான ஸ்டைலில் வரும் இந்த ஸ்பீக்கரின் விலை ரூ.8,500 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X