Home
Music

கிறிஸ்துமஸ் பரிசாக ஆடியோ டெக்னிக்கா வழங்கும் புதிய ஹெட்போன்கள்!

By Super
கிறிஸ்துமஸ் பரிசாக ஆடியோ டெக்னிக்கா வழங்கும் புதிய ஹெட்போன்கள்!

கிறிஸ்மஸ் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. எல்லா நிறுவனங்களும் கிறிஸ்மஸை முன்னிட்டு தங்கள் தயாரிப்புகளுக்கு தள்ளுபடி விற்பனையை தொடங்கிவிட்டன. அதன் தாக்கம் ஹெட்போன் சந்தையையும் விட்டு வைக்க வில்லை. குறிப்பாக கிறிஸ்மஸ் அன்பளிப்பை கொடுக்க விரும்புவோர் இந்த முறை தரமான ஹெட்போன்களை பரிசாக வழங்கலாம்.

கிறிஸ்துமஸ் பரிசுக் கொடுப்பதற்கு ஏதுவாக ஆடியோ-டெக்னிக்கா நிறுவனம் புதிய ஹெட்போன்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஹெட்போன்கள் சாதாரண ஹெட்போன்களில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து தரமான ஹெட்போன்களாக வருகின்றன.

தற்போது புதிய ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ள ஆடியோ-டெக்னிக்கா நிறுவனம், மின்னனு தயாரிப்பில் 45 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த நிறுவனம் தனது ஹெட்போன்கள், மைக்ரோபோன்கள் மற்றும் மிக்சர்கள் மூலம் மக்களின் மனதில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றிருக்கிறது. அவற்றின் படைப்புகளான மெட்டாலிக்கா மற்றும் லின்கின் பார்க் போன்றவை மிகவும் பிரபலமான படைப்புகள் ஆகும்.

இப்போது ஆடியோ-டெக்னிக்கா நிறுவனம் சிகே-400, சிகேஎஸ்-500 மற்றும் டபிள்யூஎஸ் வரிசை ஹெட்போன்களை அறிமுகப்படுத்துகிறது. சிகே-400ஐ ஹெட்போன் மிகவும் சிறியதாகும். இது ஊதா, சிவப்பு, வெள்ளை மற்றும் பிங்க் ஆகிய பல நிறங்களில் வருகிறது. இந்த ஹெட்போன் இன்லைன் ரிமோட் கண்ட்ரோலர் கொண்டிருப்பதால் இதை ஐபோட் மற்றும் ஐபேடுகளில் மிக எளிதாக இணைக்க முடியும்.

இந்த சிகே 400ஐ ஹெட்போனை நோக்கியா, பிளாக்பெரி மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களிலும் மிக எளிதாக இணைக்க முடியும். சிகே 400 வரிசையில் இறுதியாக வரும் சிகே-400 எக்ஸ்பி ஹெட்போனை சோனி எரிக்சனின் எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போனில் எளிதாக இணைக்க முடியும்.

ஆடியோ-டெக்னிக்காவின் சிகேஎஸ் 55ஐ ஹெட்போன் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. இந்த ஹெட்போன் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது. மேலும் இவை கட்டிங் எட்ஜ் தொழில் நுட்பத்துடன் வருகின்றன. இவற்றில் இருந்து வரும் இசை மிகவும் அருமையாக அதே நேரத்தில் அதிரடியாக இருக்கும்.

ஆடியோ-டெக்னிக்கா டபிள்யூஎஸ்55ஐ ஹெட்போனை காதுகளின் மேல் எளிதாக பொருத்தலாம். இந்த ஹெட்போன் 5 நட்சத்திர விருதை பெற்றுள்ளது. இந்த வரிசை ஹெட்போன்கள் ரூ.2,000 முதல் ரூ.8,000 வரை கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X