Home
Music

'ஷேக்'ஆனாலும் 'சோக்கா' படம் பிடிக்கும் கெனான் கேமராக்கள்!

By Karthikeyan
'ஷேக்'ஆனாலும் 'சோக்கா' படம் பிடிக்கும் கெனான் கேமராக்கள்!

நமது விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப கேமராக்களை தேர்ந்தெடுப்பது என்பது சற்று கடினமான விஷயமாகும். அதற்காக வல்லுநர்களை நாடலாம். அவர்கள் வழிகாட்டுவார்கள். கேமரா தயாரிக்கும் பல நிறுவனங்கள் சிறந்த மற்றும் நவீன கேமராக்களை களமிறக்குகின்றன. அவற்றில் முக்கியமான கேனன் நிறுவனம் பல காலமாக சிறந்த தரமான கேமராக்களை தயாரித்து வருகிறது. மேலும் கெனான் கேமராக்கள் மிகவும் பிரபலமானவை.

மேலும் இந்த புதிய ஆண்டில் கெனான் கேமரா பிரியர்களுக்காக பல புதிய நவீன கேமராக்களைக் களமிறக்க இருக்கிறது. அதுவும் லாஸ் வேகாசில் நடுக்கும் கண்காட்சியில் தனது புதிய அட்டகாசமான கேமராக்களை அறிமுகம் செய்கிறது. ஏற்கனவே கெனான் ஐஎக்ஸ்யுஎஸ் வரிசை கேமராக்களை களிமிறக்கியிருக்கிறது. அந்த ஐஎக்ஸ்யுஎஸ் வரிசையில் இப்போது ஐஎக்ஸ்யுஎஸ் 125 எச்எஸ் மற்றும் ஐஎக்ஸ்யுஎஸ் 500 எச்எஸ் என்ற இரண்டு அட்டகாசமான கேமராக்களை களமிறக்குகிறது.

இந்த இரண்டு கேமராக்களும் பார்க்க மிக ஸ்டைலாக இருக்கின்றன. அதுபோல் இந்த இரண்டு கேமராக்களும் சூப்பரான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. அதாவது மிக உயர்தர சென்சிட்டிவ் சென்சார்கள் மற்றும் மேம்பட்ட ஆப்டிக்கல் சூம் போன்ற வசதிகளை இந்த கேமராவில் அனுபவிக்கலாம்.

ஐஎக்ஸ்யுஎஸ் 500 எச்எஸ் கேமராவின் சிறப்புகளைப் பார்க்கும் போது இந்த கேமரா 10.1 எம்பி உயர் சென்சிட்டிவிட்டி சிஎம்ஒஎஸ் சென்சார் மற்றும் 12எக்ஸ் ஆப்டிக்கல் சூம் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ஐஎக்ஸ்யுஎஸ் 125 எச்எஸ் 16.1 எம்பி உயர் சென்சிட்டிவிட்டி சிஎம்ஒஎஸ் சென்சார் மற்றும் 5எக்ஸ் ஆப்டிக்கல் சூம் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு கேமராக்களும் சாதாரணமாக படம் பிடிப்பதற்கும் சூம் செய்து படம் பிடிப்பதற்கும் மிகவும் ஏதுவாக இருக்கும். இவற்றில் இருக்கும் இன்டலிஜென்ட் ஆட்டோ மோட் மிகத் தெளிவான படங்களைத் தருகிறது. மேலும் இது முழு எச்டி வீடியோ ரிசலூசனை வழங்கும். படம் எடுக்கும் போது கை அசைந்தாலும் இந்த இன்டலிஜென்ட் ஐஎஸ் மிகத் தெளிவான படங்களை வழங்கும். இந்த அற்புதமான இரண்டு கேமராக்களும் வரும் மார்ச் மாதத்தில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X