Home
Music

பீடு நடை போடும் பிடி-860 ப்ளூடூத் ஹெட்போன்

By Super
பீடு நடை போடும் பிடி-860 ப்ளூடூத் ஹெட்போன்
நியூபோர்சின் பிடி860 ஹெட்போன் உலக அளவில் நாளுக்கு நாள் பிரபலமாகி வருகிறது. தற்போது சந்தைக்கு வந்திருக்கும் ப்ளூடூத் ஹெட்போன்களோடு இந்த புதிய பிடி-860 ஹெட்போனை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது மிக உயர்ந்து இருக்கிறது. இந்த புதிய ஹெட்போனில் ப்ளூடூத் 2.1 உள்ளது. அதனால் இதில் இணைப்பு வசதி மிக எளிதாக ஒன்றாக இருக்கிறது.

பிடி860 ஹெட்போன் ப்ளூடூத் வசதி கொண்ட மொபைல் போன்கள் மற்றும் எம்பி3 ப்ளேயர்களிடமிருந்து க்ரிஸ்டல் க்ளியர் உயர்தர ஒலியை வாங்கி நமக்குத் தருகிறது. அதனால் இந்த ஹெட்போனை ப்ளூடுத் கொண்ட கணினிகள் மற்றும் ஸ்டீரியோ ப்ளேயர்களோடு மிக எளிதாக இணைக்க முடியும்.

பிடி860 ஹெட்போன் ஒரு ஹேண்ட் ப்ரீ டிவைஸ் ஆகும். இது எ2டிபி என்ற அட்வான்ஸ்டு ஆடியோ டிஸ்ட்ரிபியூசன் ப்ரொபைலைக் கொண்டிருக்கிறது. இந்த தொழில் நுட்பம் இரைச்சலைத் தடுக்கிறது. மேலும் புறங்களில் இருந்து வரும் சத்தங்களைத் தவிர்க்கிறது.

மேலும் இந்த ஹெட்போனின் ஸ்டீரியோ ஒலி அமைப்பும் மிக அபாரமாக உள்ளது. அதன் ஒலி அளவு மற்றும் ட்ராக் கட்டுப்பாட்டு பட்டன் இதன் ஒலி அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் இதன் இன்பில்ட் மைக்ரோபோன் இதற்கு உத்திரவாதம் தருகிறது.

பிடி860 ஹெட்போன் குறைந்த ஒலியுடன் வரும் ஆடியோ அவுட்புட்டுகளையும் சரி செய்து விடும்.

அடுத்து பார்த்தால் இதன் பரப்பளவு 155 x 157 x 38 மிமீ ஆகும். இதன் எடை 103 கிராம்களாகும். இதன் பிரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 20 ஹெர்ட்ஸ் முதல் 22கே ஹெர்ட்ஸ் ஆகும். அதுபோல் இதன் டைனாமிக் ரேன்ஜ் 16பிட் முதல் 92டிபி ஆகும்.

மேலும் இது ரிமோட் கட்டுப்பாடு கொண்டதால் இதை இயக்குவது மிக எளிதாக இருக்கும். குறிப்பாக இதன் ப்ளூடூத்திலிருந்து 10மீ அல்லது 33 அடி தூரம் இருந்து இந்த பிடி860 ஹெட்போனை மிக எளிதாக இயக்க முடியும்.

இந்த பிடி860 ஹெட்போனின் பேட்டரியும் மிக அபாரமான சக்தியைக் கொண்டது. அதாவது இதன் பேட்டரி 9 மணி நேர டாக் டைமும் அதுபோல 8 மணி நேர மீயூசிக் டைமும் கொண்டுள்ளது. இந்த பிடி860 ஹெட்போனின் விலையைப் பார்த்தால் இதன் ரூ.3,900 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X