ப்ளூடூத் வசதியுடன் வரும் புதிய ஸ்பீக்கர்கள்!

Posted By: Karthikeyan
ப்ளூடூத் வசதியுடன் வரும் புதிய ஸ்பீக்கர்கள்!

ப்ரேவன் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய ஆறு வரிசை ஸ்பீக்கர்களை களம் இறக்கி இருக்கிறது. இந்த ஸ்பீக்கர்கள் ப்ளூடூத் சப்போர்ட்டைக் கொண்டவையாகும். மேலும் இந்த ஸ்பீக்கர்களில் யுஎஸ்பி போர்ட் உள்ளதால் இவற்றை மொபைல்களில் இணைத்து சூப்பராக பாடல் கேட்கலாம். மேலும் இந்த ப்ரேவன் ஸ்பீக்கர்கள் பல வேலைகளைச் செய்யும் எச்டி ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே கூறியது போல் இந்த ஸ்பீக்கர்கள் யுஎஸ்பி இணைப்பு, மொபைல் சார்ஜிங், ப்ளூடூத் இணைப்பு, வயர்லஸ் வசதி, 3 வாட்ஸ் ஸ்பீக்கர் அவட், உயர்தர ஸ்டீரியோ ஆடியோ, டூப்லக்ஸ் மைக்ரோபோன் மற்றும் 3.5 ஆடியோ இன் மற்றும் ஆடியோ அவுட் போன்ற வசதிகளை வழங்குகிறது.

மிகவும் சொகுசாகத் தோன்றும் இந்த ஸ்பீக்கர்கள் மிக உயர்தர இசையை வழங்கக் கூடியவை. இவற்றின் பேட்டரி 12 முதல் 20 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும். 33 அடி வரை வயர்லஸ் வசதியுடன் செயல்படும்.

இந்த ஸ்பீக்கர்கள் 3 மாடல்களில் வருகின்றன. அதாவது ப்ரேவன் 625எஸ், 600 மற்றும் 650 ஆகிய மாடல்களில் வருகின்றன. குறிப்பாக இவற்றை பயணத்தின் போதும் விளையாடும் போதும் மிக அருமையகப் பயன்படுத்தலாம்.

ப்ரேவன் 600 ரூ.7500க்கும், ப்ரேவன் 625எஸ் ரூ.9000க்கும், ப்ரேவன் 650 ரூ. 10000க்கும் விற்கப்படும். இந்த ஸ்பீக்கர்கள் வரும் ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot