Home
Music

இதமான இசை வழங்கும் 3 புதிய ஸ்பீக்கர்கள்!

By Karthikeyan
இதமான இசை வழங்கும் 3 புதிய ஸ்பீக்கர்கள்!

இசைப் பிரியர்களைக் குளிர்விக்க ப்ரேவன் நிறுவனம் 6 வரிசை ஸ்பீக்கர்களைக் களமிறக்க இருக்கிறது. இந்த ஸ்பீக்கரைப் பயன்படுத்துவோர் இதைப் பற்றிய விமர்சனத்தையும் நிறுவனத்திற்கு அனுப்பும் வகையில் இந்த ஸ்பீக்கர்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்பீக்கர்கள் சிறந்த இசை அனுபவத்தை வழங்கும் என்று ப்ரேவன் உத்திரவாம் அளிக்கிறது.

இந்த ப்ரேவேன் ஸ்பீக்கர்கள் ப்ரேவன் 600, 650 மற்றும் 625 போன்ற மாடல்களில் வருகின்றன. ப்ரேவன் 600 மற்றும் 650 ஸ்பீக்கர்கள் விமானம் செய்யப் பயன்படும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. இவை உயர்ரக ஸ்பீக்கர்களாகும். மேலும் இவை இரண்டு 2 ஊபர்களுடன் வருகின்றன. இந்த ஸ்பீக்கர்களில் இரைச்சல் இல்லாத இனிமையான இசையைக் கேட்கலாம்.

ப்ரேவன் 625 ஸ்பீக்கர் சாதாரண அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்வலைகளை தாங்கக்கூடிய ரப்பரும் உண்டு. மேலும் இந்த ஸ்பீக்கர் எல்இடி வசதியுடன் வருகிறது.

ப்ரேவன் 600 ஸ்பீக்கர் 12 மணி நேர ப்ளே பேக்குடன், யுஎஸ்பி, ப்ளூடூத், ரிசார்ஜ் செய்யக்கூடிய லயன் பேட்டரி மற்றும் 3.5 எம்எம் ஸ்டீரியோ போன்ற வசதிகளுடன் வருகிறது. இதன் விலை ரூ.7500 ஆகும். மேலும் இது சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் வருகிறது.

ப்ரேவன் 650 ஸ்பீக்கர் 20 மணி நேர ப்ளேபேக் வசதியுடன், 3.5 எம்எம் ஸ்டீரியோ, யுஎஸ்பி இணைப்பு, ப்ளூடூத் மற்றும் ரிசார்ஜ் செய்யக்கூடிய லயன் பேட்டரி ஆகிய வசதிகளுடன் வருகிறது. இதன் விலை ரூ.9500 ஆகும். மேலும் இந்த ஸ்பீக்கர் பளபளக்கும் வெள்ளி நிறத்தில் வருகிறது.

இறுதியாக ப்ரேவன் 625 ஸ்பீக்கர் யுஎஸ்பி இணைப்பு, ப்ளூடூத், 16 மணி நேர ஆடியோ ப்ளேபேக் மற்றும் ரிசார்ஜ் செய்யக்கூடிய லயன் பேட்டரி போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்பீக்கரை ரூ.9000க்கு வாங்கலாம். இந்த ஸ்பீக்கர் கருப்பு நிறத்தில் களையாக வருகிறது.

மேற்சொன்ன இந்த 3 ஸ்பீக்கர்களும் இசைப் பிரியர்களின் மனங்களைக் கிறங்கடிக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X