Home
Music

அதிரடி இசைக்கு போஸ்டன் ஆக்குவோஸ்டிக்ஸ் ஸ்பீக்கர் சிஸ்டம்

By Karthikeyan
அதிரடி இசைக்கு போஸ்டன் ஆக்குவோஸ்டிக்ஸ் ஸ்பீக்கர் சிஸ்டம்

போஸ்டன் ஆக்குவோஸ்டிக்ஸ் நிறுவனம் தரமான இசைப் பேழைகளை வழங்குவதில் தனி முத்திரை பதித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக தற்போது புதிய படைப்பான போஸ்டன் ஆக்குவோஸ்டிக்ஸ் டிவி மாடல் 25 என்ற ஸ்பீக்கர் சிஸ்டத்தை உலகச் சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்பீக்கர் சிஸ்டம் வெர்ச்சுவல் சரவுண்ட் சவுன்ட் தொழில் நுட்பம் கொண்டு வருகிறது.

போஸ்டன் ஆக்குவோஸ்டிக்ஸ் டிவி மாடல் 25 உயர் தரத்துடனும் பக்காவான் செயல்திறனுடனும் வருகிறது. இது ப்ளக் அன்ட் ப்ளே தொழில் நுட்பத்துடன் வருகிறது. இதை ப்ரீ இன்ஸ்டால் செய்வதற்கு ஒரு வயர் ஹூக்அப் மற்றும் வயர்லஸ் துணை ஊபரும் உள்ளது.

போஸ்டன் ஆக்குவோஸ்டிக்ஸ் டிவி மாடல் 25ன் வெர்ச்சுவல் சரவுண்ட் சிஸ்டம் மிகத் தரமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதில் ஒரு சவுன்ட் பார் உள்ளது. இதை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும். இந்த சிஸ்டம் எல்லா வகையான இசைகளையும் சப்போர்ட் செய்யும். அதனால் இதன் உதவியோடு படம் பார்க்கும் போது படத்தின் இசை மிக அருமையாக இருக்கும்.

போஸ்டன் ஆக்குவோஸ்டிக்ஸ் டிவி மாடல் 25ன் இணைப்பு வசதிக்காக 3.5மிமீ துணை இன்புட் உள்ளது. மேலும் இந்த ஸ்பீக்கர் சிஸ்டம் 1 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

போஸ்டன் ஆக்குவோஸ்டிக்ஸ் டிவி மாடல் 25ன் வசதிகளைப் பார்த்தால் அது ஏராளமாக உள்ளது. அதாவது இது 150 வாட்ஸ் மின்திறனுடன் வருகிறது. இதன் சவுன்ட்பார் டூவல் 1-1/2X6 இன்ச் ட்ரைவர்களுடன் வருகிறது. மேலும் இதன் தரமான ஒலி அமைப்பிற்காக 6 இன்ச் துணை ஊபர்கள் வருகின்றன. இந்த ஸ்பீக்கரின் பரப்பு 12 x 800 x 112மிமீ ஆகும். இதன் துணை ஊபரின் பரப்பு 241 x 266 x 280மிமீ ஆகும்.

போஸ்டன் ஆக்குவோஸ்டிக்ஸ் டிவி மாடல் 25 குறிப்பாக டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போதும், வீடியோ கேம்களை விளையாடும் போதும் அதுபோல் படங்களைப் பார்க்கும் போதும் அது மிகத் தரமான இசையை வழங்குகிறது. மேலும் இதில் ட்ரபுள் ப்ரீ இன்ஸ்டாலேசன் ப்ரசீஜர்ஸ் உள்ளன. மேலும் இதன் வயர்லஸ் துணை ஊபர்களை நமது அறையின் எந்த இடத்திலும் வைத்துக் கொள்ளலாம். மேலும் இது ரிமோட் கண்ட்ரோலுடன் வருவதால் இதை இயக்குவதும் மிக எளிதாக இருக்கும்.

போஸ்டன் ஆக்குவோஸ்டிக்ஸ் டிவி மாடல் 25 ஸ்பீக்கர் கிரில் மற்றும் பவர் கார்டு, அனலாக் ஆர்சிஎ கேபிள் மற்றும் டிஜிட்டல் ஆப்டிக்கல் கேபிள் ஆகியவை கொண்டு வருகிறது. மேலும் இதை இயக்கவதற்கு வழிகாட்டியாக மேனுவலும் வழங்கப்படுகிறது.

போஸ்டன் ஆக்குவோஸ்டிக்ஸ் டிவி மாடல் 25ன் விலை ரூ.20000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X