தாளம் போட வைக்கும் போஸ் கம்பானியன் 20 ஸ்பீக்கர்ஸ்

Posted By: Staff

தாளம் போட வைக்கும் போஸ் கம்பானியன் 20 ஸ்பீக்கர்ஸ்
போஸ் கம்பானியன் 20 ஸ்பீக்கர்ஸ் இப்போது மார்க்கெட்டைத் தம் கையில் வைத்திருக்கின்றன. அதற்கு காரணம் அதன் ஈடு இணையற்ற செய்ல் திறனாகும். இந்த ஸ்பீக்கரின் யூனிட் 2 தனியான ஒலிப்பெருக்கிகளுக்கான தரமான துல்லிமான ஒலி அமைப்பைக் கொண்டுள்ளன.

இந்த ஸ்பீக்கர்களிலிருந்து வரும் ஒலி இயற்கையாகவும் அதே நேரத்தில் துணை ஊபர்கள் இல்லை என்றாலும் தரமான ஒலியைத் தரக்கூடிய தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. அதனால் போஸ் கம்பானியன் 20 மல்டிமீடியா ஸ்பீக்கர்ஸ்க்கு துணை ஊபர்கள் தேவையில்லை.

புதிய ஸ்பீக்கர் யுனிட் தேவையான ஆடியோ தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கர் யுனிட் அதிசயிக்கும் வசதிகளை வழங்குகிறது. ஒலி அளவு, மீயுட் மற்றும் மற்ற அமைப்புகள் ஆகியவை மிகவும் டச் சென்சிட்டிவாக இருக்கின்றன.

இதன் கன்ட்ரோல் பேட் ஒலி அளவைப் பிரித்துக் கொடுக்கும் வேலையைப் பக்காவாகச் செய்கின்றன. இதில் நாம் ஹெட்போனையும் பயன்படுத்த முடியும். மேலும் இதில் ஐபோட் டிவைஸ் அல்லது மற்ற ஆடியோ ப்ளேயர்களையும் இணைக்க முடியும்.

இந்த ஸ்பீக்கர்கள் நவீன தொழில் நுட்பம் கொண்ட ட்ரூ ஸ்பேஸ் ஸ்டீரியோ சிக்னல் ப்ராசஸிங் கொண்டுள்ளதால் ஸ்பீக்கரிலிருந்து வரும் ஒலி மிக தரமாக அருமையாக இருக்கிறது. கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது என்பது போல் இதன் ஸ்பீக்கர்கள் சிறியவையாக இருந்தாலும் அதன் செயல்பாடு மிக அபாரமாக உள்ளது.

வீடியோ கேம் விளையாடும் போது அதற்கென்று தனி ஒலிகள், படம் பார்க்கும் போது அதற்கென்று தனி சத்தங்கள் என்று இசைப் பிரியர்களுக்கு ஏற்றார்போல் அமைந்துள்ளன. இந்த ஸ்பீக்கர்களின் விலை அதிகமாகத் தோன்றலாம். ஆனால் இதன் தரத்தைப் பார்த்தால் இதன் விலை மிகக் கொஞ்சமாகவே தோன்றும். இதன் விலை என்று பார்த்தால் 199 அமெரிக்க டாலர்களாகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot