Home
Music

மனம் கவர் கள்வன் போஸ் சிஹூவாஹூவா வயர்லஸ் ஆடியோ சிஸ்டம்

By Super
மனம் கவர் கள்வன் போஸ் சிஹூவாஹூவா வயர்லஸ் ஆடியோ சிஸ்டம்
ஆப்பிள் நிறுவனத்தின் நவீன ஏர்ப்ளே மற்றும் சோனோஸ் வயர்லெஸ் ஆடியோ சிஸ்டங்களுக்கு போட்டியை கொடுக்கும் வகையில் போஸ் நிறுவனமும் வயர்லெஸ் ஆடியோ சிஸ்டங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் புதிய வயர்லெஸ் ஆடியோ சிஸ்டத்தை போஸ் வடிவமைத்து வருகிறது.

இதைப் பற்றிய தகவல்கள் இணையதளத்தில் கசிந்த வண்ணம் உள்ளன. இந்த புதிய படைப்பின் பெயர் போஸ் சிஹூவாஹூவா ஆகும். தகவல்களின் படி சிஹூவாஹூவா புதிய தொழில் நுட்பத்துடன் வயர்லஸ் எம்பி3 ஸ்பீக்கர் டாக்கிங் ஸ்டேசனுடன் சிறியதாக உள்ளது. அதனால் இது ஒரு போர்ட்டபுள் டிவைஸ் ஆகும்.

அடுத்ததாக சிஹூவாஹூவாவின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் அதன் வலிமையான மற்றும் ஆழமான் பேஸ் ஆகும். இதிலிருந்த வரும் ஒலி மற்றும் இசை அறையின் மூலை முடுக்கு மற்றும் பொருள்கள் எல்லாம் எதிரொலிக்கும். மேலும் இது சவுண்ட்லிங்க் தொழில் நுட்பத்தையும் கொண்டுள்ளது.

இதன் மூலம் வயர்கள் இல்லாமல் யுஎஸ்பி டோங்கிள் மூலம் இதனை இயக்க முடியும். ஆனால் இந்த தொழில் நுட்பம் போஸின் ஒரு சில தயாரிப்புகளில் மட்டுமே உள்ளது.

போஸ் சிஹூவாஹூவா வயர்லஸ் ஆடியோ சிஸ்டத்திற்கு எந்த ஒரு அடாப்டரும் தேவையில்லை. அதனால் இதை எந்த இடத்தில் வைத்தும் இயக்கலாம். மேலும் இதற்கு அதிகமான இட வசதியும் தேவையில்லை. அதனால் இது வாடிக்கையாளர் மத்தியில் ஒரு பெரிய புயலைக் கிளப்பும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X