போஸ் ப்ளூடூத் வரிசை2 ஹெட்செட் - ஒரு சிறப்புப் பார்வை

இந்த ஹெட்செட்டின் பின்புறம் எல்இடி லைட்டுகள் உள்ளன. அதன் மூலம் இவற்றின் ப்ளூடூத் இணைப்பு மற்றும் பேட்டரியின் ஆயுள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். மேலும் பேட்டரியில் இருக்கும் மின் திறனை இதிலிருக்கும் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ப்ளாஷ்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்த போஸ் ப்ளூடூத் வரிசை 2 ஹெட்செட் சுவர் அடாப்டர், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய டிப்ஸூகள் மற்றும் யூஎஸ்பி ஜார்ஜர் போன்றவை கொண்டு வருகின்றன. இதன் ஒரிஜினல் ஹெட்செட்டை நமது வலது காதில் மட்டுமே பொருத்த முடியும். ஆனால் இந்த 2 வரிசை ஹெட்செட்டை 2 காதுகளிலும் பொருத்த முடியும். அதுபோல் இந்த 2 வரிசை ஸ்டேஹியர் டிப்ஸ்களைப் பயன்படுத்துகிறது. மேலும் இதன் சிறப்பு என்னவென்றால் இந்த ஹெட்செட்டை தொடர்ந்து பல மணி நேரம் நமது காதுகளில் பொருத்திக் கொள்ள முடியும்.
இந்த போஸ் ப்ளூடூத் வரிசை 2 ஹெட்செட்டை முதலில் ஆன் செய்தால் அது தானாகவே பேரிங் மோடுக்குச் சென்றுவிடும். தொடர் பேரிங்கிற்கு நாம் இதன் கால் பட்டனை 5 செகண்டுகள் அழுத்தினால் போதும். இதன் மெனு செட்டிங்கில் உள்ள சேர்ச் பார் ஹெட் செட் என்ற பட்டனைத் தட்டினால் போது பேரிங் வந்து விடும்.
இந்த போஸ் ப்ளூடூத் வரிசை 2 ஹெட்செட்டின் வாய்ஸ் தரம் மிகப் பக்காவாக இருக்கிறது. இதன் ஒலி அளவை நாம் இரைச்சலில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் அதிகரித்துக் கொள்ளலாம். இது ஜாபோன் எரா கொண்டிருப்பதால் அழைப்பு வரும்போது இதன் ஒலி அதை பாதிக்காது. இதன் பேட்டரி 5 மணி 46 நிமிட டாக் டைமை வழங்குகிறது.
இந்த போஸ் ப்ளூடூத் வரிசை 2 ஹெட்செட் எ2டிபி ஒலி தரத்தைக் கொண்டுள்ளது. இதன் விலையைப் பார்த்தால் ரூ.6750க்கு இந்தியாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications