பெயரில் மட்டும் பிளஸ் இல்லை இதன் பெர்பார்மென்ஸே பிளஸ் தான்.. மிரட்டும் boAt வாட்ச்..
இந்தியாவில் அதிக வாடிக்கையாளரை கவர்ந்த நிறுவனமாக திகழும் பிராண்டான போட், அதன் வாடிக்கையாளர்களுக்காக புதிய ஸ்மார்ட்வாட்ச் - ஸ்டார்ம் பிளஸ் என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த போட் ஸ்டோர்ம் பிளஸ் (boAt Storm Plus) ஸ்மார்ட் வாட்ச் சாதனம் 1.78' இன்ச் AMOLED டிஸ்பிளேவை ப்ளூடூத் வாய்ஸ் காலிங் அம்சத்துடன் வழங்குகிறது. இது 100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட் உடன் பலவற்றைக் கொண்டுள்ளது. இந்த போட் ஸ்டோர்ம் பிளஸ் (BoAt Storm Plus) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இந்தியாவில் ரூ.2,299 விலையில் வருகிறது.

இந்த புதிய போட் ஸ்டோர்ம் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஜூலை 29 முதல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வாங்க கிடைக்கும். இந்த புதிய போட் ஸ்டோர்ம் பிளஸ் (BoAt Storm Plus) ஸ்மார்ட்வாட்ச் சிலிகான் ஸ்ட்ராப் வேரியண்டில் நான்கு வண்ண விருப்பங்களை பெறுகிறது.
இதில் கன்மெட்டல் கிரே (Gunmetal Grey), ஜெட் பிளாக் (Jet Black), ஆலிவ் கிரீன் (Olive green) மற்றும் ரோஸ் பிங்க் (Rose Pink) ஆகிய நிறங்களில் வாங்க கிடைக்கும். இதற்கிடையில், மெட்டாலிக் ஸ்ட்ராப் வகைகள் இரண்டு வண்ண விருப்பங்களை பெறுகின்றன. இது மெட்டாலிக் பிளாக் (Metalic Black) மற்றும் மெட்டாலிக் சில்வர் (Metalic Silver) ஆகிய நிறங்களில் வாங்க கிடைக்கும்.
BoAt Storm Plus ஆனது பிரவுன் கலர் லெதரில் லெதர் ஸ்ட்ராப் வேரியண்டிலும் வருகிறது. போட் ஸ்டோர்ம் பிளஸ் (boAt Storm Plus) அம்சங்கள் ஸ்மார்ட்வாட்ச் 1.78' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேவை (AOD) அம்சத்துடன் ஆதரிக்கிறது. இது 700 nits பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.
இது ஒரு சதுர வடிவ டயலைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் 100 க்கும் மேற்பட்ட தனிப்பயனாக்கக்கூடிய வாட்ச் பேஸ் உடன் வருகிறது. இது புளூடூத் அழைப்பிற்கான உயர்தர மைக்ரோஃபோனையும் இன்பில்ட்டாக கொண்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்வாட்ச்சில் இதய துடிப்பு சென்சார், இரத்த ஆக்ஸிஜன் (SpO2) சென்சார் மற்றும் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

கூடுதலாக, இது 100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை வழங்குகிறது. இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இது 240mAh பேட்டரியுடன், ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், புளூடூத் காலிங் அம்சம் இயக்கப்பட்டிருப்பதால், பயனர்கள் சுமார் 2 நாட்கள் பேட்டரி ஆயுளை எதிர்பார்க்கலாம்.
இந்த ஸ்மார்ட்வாட்ச் கேமரா கண்ட்ரோல், மியூசிக் கட்டுப்பாடு மற்றும் ஃபைண்ட் மை ஃபோன் செயல்பாடு போன்ற பல்வேறு பயனுள்ள அம்சங்களையும் கொண்டுள்ளது. மறுபுறம், boAt சமீபத்தில் அதன் சமீபத்திய புதுவரவு சாதனமாக 'ஸ்மார்ட் ரிங் (Smart Ring)' என்ற சாதனத்தை வெளியிட்டது. இந்த புதுமையான சாதனம் ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
செராமிக் மற்றும் உலோகக் கட்டுமானத்தைக் கொண்டுள்ளது. போட் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட் ரிங் விதிவிலக்காக இலகுரக மற்றும் நீண்ட காலத்திற்கு கூட அணிய வசதியாக உள்ளது. இதே போன்ற சாதனத்தை சாம்சங் நிறுவனமும் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








