உற்சாகமான பயணத்திற்கு புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர்!

பீக்கன் நிறுவனம் ஒரு புதிய போர்ட்டபுள் ஸ்பீக்கரைக் களமிற்கிக இருக்கிறது. பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் இந்த ஸ்பீக்கர் பீக்கன் ஆடியோ போனிக்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதன் ஸ்டைலும் பக்காவாக இருக்கிறது. அதுபோல் இதன் தரமும் மிக அருமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது பயணத்திற்கு ஏற்ற ஒரு ஸ்பீக்கர் என்று கருதப்படுகிறது.
இந்த போனிக்ஸ் ஸ்பீக்கர் மிகத் துல்லமியமான அதே சமயத்தில் இரைச்சல் இல்லாத அளவு சத்தத்துடன் கூடிய இசையை வழங்கக்கூடியது. அதற்கேற்ற வகையில் இதில் உள்ள ஸ்பீக்கர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதை சார்ஜ் செய்வதற்கு ஒரு மினி யூஎஸ்பியும் இதில் உள்ளது.
இந்த ஸ்பீக்கரின் மேல் பகுதியில் இதை இயக்குவதற்கான பட்டன்கள் உள்ளன. மேலும் இதில் ப்ளூடூத் வசதியும் உண்டு. அதனால் ப்ளூடூத் வசதி கொண்ட சாதனங்களோடு இந்த ஸ்பீக்கரை மிக எளிதாக இணைக்க முடியும். இந்த ஸ்பீக்கரில் இரைச்சல் இருக்கவே இருக்காது. குறிப்பாக மற்ற ப்ளூடூத் ஸ்பீக்கர்களை விட இந்த புதிய ஸ்பீக்கர் அருமையான செயல் திறனைக் கொண்டிருக்கிறது என்று கருதப்படுகிறது.
இந்த ஸ்பீக்கரில் இருக்கும் இரண்டு சிறிய ஸ்பீக்கர்கள் சாப்ட் டச் எக்ஸ்டீரியரைக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்த ஸ்பீக்கர் 4 மணி நேர இயங்கு நேரத்தையும் வழங்குகிறது. வயர்லஸ் வசதியுடன் வரும் இந்த ஸ்பீக்கர் 10 அடிக்குள் இருக்கும் ப்ளூடூத் சாதனங்களோடு அருமையாக இணைந்து சூப்பரான இசை மழையைப் பொழியும்.
இந்த பீக்கன் ஸ்பீக்கரை ரூ.5,000க்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications