Home
Music

புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும் ஆடிசி

By Super
புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும் ஆடிசி
தரமான ஒலி அமைப்புடன் இசை கேட்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. அதற்கான மோகமும் இந்த 21ஆம் நூற்றாண்டில் அதிகமாகவே உள்ளது. அதனால் இசை பேழைத் தயாரிப்பாளர்களும் புதிய புதிய தொழில் நுட்பத்துடன் தங்களது போட்டியாளர்களை வீழ்த்த போராடி வருகின்றனர். அந்த வரிசையில் ஆடிசி நிறுவனமும் தனது புதிய லோவர் ஈஸ்ட் சைட் ஆடியோ டோக் ஏர் என்ற ஸ்பீக்கர் சிஸ்டத்தை களமிறக்குகிறது.

இந்த புதிய புதிய லோவர் ஈஸ்ட் சைட் ஆடியோ டோக் ஏர் ஸ்பீக்கர் சிஸ்டம் வீடுகளில் பொருத்துவதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆடிசியின் ஸ்மார்ட் ஸ்பீக்கர் தொழில் நுட்பத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் இதன் விலை மிகக் குறைவாகும்.

இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் வயர் இல்லாமல் இதை நமது வீடுகளில் உள்ள ஐபோன், ஐபேட், ஐபோட் மற்றும் கனிணி போன்ற டிவஸ்களோடு எளிதாக இணைக்க முடியும். இதிலிருந்து வரும் ஒலி மிகத் தரமாகவும் இனிமையாகவும் இருக்கும்.

இந்த புதிய லோவர் ஈஸ்ட் சைட் ஆடியோ டோக் ஏர் ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் ஆப்பிள் ஏர்ப்ளேயும் இணைந்திருப்பதால் இது வயர் இல்லாத இசையை வழங்குகிறது. ஏற்கனவே சொன்னதுபோல் இந்த ஆடியோ டோக்கை ஆப்பிள் டிவைஸ்கள் மற்றும் கணினிகளோடு இணைக்க முடியும். அதுபோல் ஐடியூன்ஸ் லைப்ரரியையும் அக்சஸ் செய்ய முடியும்.

இந்த புதிய லோவர் ஈஸ்ட் சைட் ஆடியோ டோக் ஏர் ஸ்பீக்கர் சிஸ்டம் பிரமாண்ட இசையை வழங்க பெரிய பெரிய ஸ்பீக்கர்களைக் கொண்டிருக்கவில்லை. பேசிவ் பேஸ் ரேடியேட்டர்களின் உதவியுடன் ஸ்மார்ட் ஸ்பீக்கர் தொழில் நுட்பம் இதைப் பார்த்துக் கொள்கிறது. அதனால் இதன் பேஸ் மிக அபாரமாக இருக்கும்.

ஆடிசியின் ராப் மேசன் இந்த புதிய வயர்லஸ் ஆடியோ சிஸ்டம் எவற்றோடும் ஒப்பிட முடியாத அளவிற்குத் தரமான, பிரமாதமான இசையை வழங்கும் என்று கூறுகிறார். மக்களுடைய வாழ்க்கை முறை மாறுவதுபோல் அவர்களின் தேவைகளும் மாறி வருகின்றன. அந்த மாறிவரும் அந்த தேவைகளை இந்த புதிய லோவர் ஈஸ்ட் சைட் ஆடியோ டோக் ஏர் ஸ்பீக்கர் சிஸ்டம் நிறைவு செய்யும் என்று மேசன் நம்புகிறார்.

இந்த லோவர் ஈஸ்ட் சைட் ஆடியோ டோக் ஏர் ஸ்பீக்கர் சிஸ்டம் ஏர்ப்ளே ஸ்பீக்கர் சிஸ்டத்தின் இரண்டாவது வரவாகும். இதன் பெயர் சற்று வித்தியாசமாக இருக்கிறது. அதற்கு காரணம் ஆடிசி நிறுவனம் நியூயார்க்கின் லோவர் ஈஸ்ட் சைட் பகுதியில் உள்ள வரலாறு மற்றும் கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதைப் பிரதிபலிப்பதற்காக இந்த வித்தியாசமான பெயரை வைத்திருக்கிறார்கள்.

ஆடிசி நிறுவனத்திற்கென்று ஒரு சிறப்பான வரலாறு உண்டு. இந்த புதிய ஆடிசி 2002ல் தொடங்கப்பட்டாலும் மிக விரைவில் ஒலி தொழில் நுட்பத்தில் முதலிடத்தில் வந்துவிட்டது. குறிப்பாக வண்டிகள், வீடுகள், மொபைல் துறை, திரையறங்குகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற எல்லாவற்றிலும் ஆடிசியின் ஒலி பேழைகளைக் காணலாம்.

இந்த புதிய லோவர் ஈஸ்ட் சைட் ஆடியோ டோக் ஏர் ஸ்பீக்கர் சிஸ்டம் ஆடிசி நிறுவனத்தின் மணி மகுடமாக இருக்கும் என நம்பலாம். இந்த சிஸ்டம் வரும் நவம்பரில் அமெரிக்க சந்தைக்கு வரவிருக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.19,500 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X