இரைச்சல் இல்லா நுட்பத்துடன் புதிய ஹெட்போன்!

Posted By: Karthikeyan
இரைச்சல் இல்லா நுட்பத்துடன் புதிய ஹெட்போன்!

தனிமையில் மிக சொகுசாக இசை கேட்க பெரிதும் உதவியாக இருப்பது ஹெட்போன்கள். தற்போது சந்தையில் ஏராளமான ஹெட்போன்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஆடியோ டெக்னிகா நிறுவனம் ஒரு புதிய ஹெட்போனை களமிறக்குகிறது.

எடிஎச்-எஎன்சி9 என்று அழைக்கப்படும் இந்த ஹெட்போன் அதிரடியான மற்றும் மென்மையான இசையை வழங்க இருக்கிறது. இந்த ஹெட்போனின் முக்கிய சிறப்பு இதன் வெளிப்புறத்திலிருந்து வரும் சத்தங்களைத் தடுக்கும் வசதியாகும்.

தனித்துவத்துடன் வரும் இந்த ஹெட்போன் பல சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக இந்த ஹெட்போனில் இன்லைன் மைக்ரோபோன் கண்ட்ரோல் இருப்பதால் இசைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது வரும் அழைப்புகளை மிக எளிதாக எடுக்க முடியும். இதில் உள்ள வயரை வேண்டும் போது அப்புறப்படுத்தி கொள்ளலாம்.

வெளப்புற சத்தங்களை உள்ளே விடாமல் முழுமையான இசையைத் தரும் இந்த ஹெட்போன் 3.5 எம்எம் மற்றும் 6.25 எம்எம் ஸ்டீரியோவைக் கொண்டிருக்கிறது. இந்த ஹெட்போனை மிக அழகாக மடக்கி வைத்துக் கொள்ளலாம். மேலும் இதில் 2 அடாப்டர்களும் மற்றும் எஎஎ பேட்டரியும் உள்ளன. இந்த ஹெட்போனை பாதுகாப்பாக வைப்பதற்கு ஒரு சிறிய பெட்டியும் வழங்கப்படுகிறது.

கருப்பு நிறத்தில் அட்டகாசமான ஸ்டைலில் இருக்கும் இந்த ஹெட்போன் நேற்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதன் விலை ரூ.20000 ஆகும். விலை அதிகமானாலும் இதன் செயல்திறன் அதைவிட அதிகமாக இருக்கும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot