இரைச்சல் தடுப்பு நுட்பத்துடன் வந்துள்ள ஆசஸ் ஹெட்போன்

By Super
|
இரைச்சல் தடுப்பு நுட்பத்துடன் வந்துள்ள ஆசஸ் ஹெட்போன்

இசைப் பிரியர்கள், திரைப்பட ரசிகர்கள் மற்றும் வீடியோ கேமில் மூழ்கி இருப்பவர்களுக்காகவே ஹெட்போன் சந்தை மிகத் தரமான மற்றும் வித்தியாசமான மாடல்களில் ஹெட்போன்களை வாரி வழங்குகிறது. ஒவ்வொரு ஹெட்போனும் பயன்படுத்துவோரின் தேவைகளை மிகச் சரியாக நிறைவேற்றும் வசதிகளுடன் வருகிறது.

அந்த வகையில் ஆசஸ் நிறுவனம் வீடியோ கேம் பிரியர்களை குறிவைத்து தாக்க தனது புதிய ஹெட்போனை அறிமுகப்படுத்துகிறது. அதன் பெயர் ஆசஸ் வல்கேன் ஹெட்போன் ஆகும். ஆனால் இது பார்ப்பதற்கு சற்று தடிமானாக இருக்கிறது.

வல்கேன் என்ற பெயரில் வந்துள்ள இந்த ஹெட்போன் நமது காதுகளில் சரியாக பொருந்தும் அளவில் உள்ளது. மேலும் இது ப்ளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருக்கிறது. இதன் இயர் பட்ஸ் பேப்ரிக்கால் செய்யப்பட்டுள்ளதால் காதுகளில் எரிச்சலை ஏற்படுத்தாது.

இந்த வல்கேன் ஹெட்போன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. மேலும் இதை பயணத்தின் போடு எடுத்துச் செல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும். மேலும் இந்த ஹெட்போன் மிகவும் பாதுகாப்பானது.

ஆசஸ் வல்கேன் ஹெட்போன் இரண்டு 40மிமீ ட்ரைவர்களைக் கொண்டுள்ளது. அதனால் இதிலிருந்து வரும் ஒலி மிகத் தரமாக இருக்கும். இந்த டிவைசின் இம்பீடன்ஸ் 32 ஓம்களாகும். அதுபோல் இதன் ப்ரீக்வன்ஸி ரெஸ்பான்ஸ் 10 முதல் 20000 ஹெர்ட்ஸ் ஆகும்.

இதில் ஒரு மைக்ரோ போனும் உள்ளது. இதை தனியாக பிரிக்க முடியும். மேலும் இதை மற்ற சாதனங்களோடு இணைப்பதற்காக ஒரு கேபிளும் வழங்கப்படுகிறது. இந்த கேபிளை இரண்டு 3.5மிமீ கனெக்டர்களாக பிரிக்க முடியும். மேலும் இந்த கேபிளையும் தனியாகப் பிரிக்க முடியும். மேலும் ஒலி அளவை சரி செய்வதற்கான பட்டன்களும் இதில் உள்ளன.

இந்த ஆசஸ் வல்கேன் ஹெட்போனின் அடுத்த சிறப்பு என்னவென்றால் அதன் இரைச்சல் தடுப்பு தொழில் நுட்பம் ஆகும். ஆனால் அதற்காக ஒரு ஏஏஏ பேட்டரி கொண்ட சாதனம் தேவைப்படுகிறது. இந்த ஹெட்போனின் கீழுள்ள உள்ள சிறிய பட்டனை அழுத்தினால் இரைச்சல் இருக்காது.

இந்த ஹெட்போனிலிருந்து வரும் ஒலி மிக பிரமாதமாக இருக்கும். மேலும் இதன் ஒலி அளவைக் குறைத்தாலும் அல்லது கூட்டினாலும் அது மிகத் தெளிவாக இருக்கும். மற்ற ஹெட்போன்களை ஒப்பிடும் போது வல்கேன் ஹெட்போன் பேஸ் ஒலியை மிகவும் அழகாக வழங்குகிறது. இதன் முக்கிய சிறப்பு அம்சமே இரைச்சல் தடுப்பு தொழில் நுட்பம் ஆகும்.

மேலும் வீடியோ கேம் விளையாடும் போது இந்த ஹெட்போனை நமது காதுகளில் பொருத்திக் கொண்டால் அதிலிருந்து வரும் இசை மிக அலாதியாக இருக்கும். இந்த ஆசஸ் வல்கேன் ஹெட்போனின் விலை ரூ.7000 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X