Home
Music

அட்டகாசமான புதிய ஆசஸ் ஹெட்செட்டுகள்

By Super
 அட்டகாசமான புதிய ஆசஸ் ஹெட்செட்டுகள்

இந்த புதிய ஆண்டில் ஆசஸ் நிறுவனம் 2 புதிய இசைப் பேழைகளைக் களமிறக்குகிறது. அவற்றின் பெயர்கள் முறையே எம்எஸ்-100 ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் எச்எஸ்-டபுள்யு1 வயர்லஸ் ஹெட்செட் ஆகும்.

இந்த 2 டிவைஸ்களுமே மிகவும் அடக்கமான சிறிய அளவைக் கொண்டு உயர்தரமான இசையை வழங்கக்கூடியவை. அதுபோல் இந்த இரண்டையும் மிக எளிதாக இயக்க முடியும்.

எம்எஸ்-100 ஸ்டீரியோ ஸ்பீக்கரின் சிறப்பு அம்சங்களை எடுத்துக் கொண்டால் இது யுஎஸ்பி 2.0 மற்றும் யுஎஸ்பி 3.0 இணைப்புகளைக் கொண்டிருக்கிறது. இதன் மொத்த பரப்பு 152 x 104 x 133 மிமீ ஆகும். மேலும் 93 டிபி ஒலியை வழங்கக்கூடிய 54மிமீ ஸ்பீக்கர் டிரைவர்களை இந்த ஸபீக்கர் கொண்டிருக்கிறது.

அதனால் இதன் ஒலி அமைப்பு மிக அபாரமாக இருக்கும். எனவே இந்த ஸ்பீக்கரை விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் விஸ்டா போன்ற இயங்கு தளங்களோடு பயன்படுத்தும் போது துணை டிரைவர்கள் எதுவும் தேவைப்படாது. மேலும் இந்த ஸ்பீக்கர் 100 ஹெர்ட்ஸ் முதல் 20 கேஹெர்ட்ஸ் ப்ரீக்வன்சி ரெஸ்பான்சை வழங்குகிறது. மேலும் இது 2 x 1.5 டிபுள்யு ஆர்எம்எஸ்ஸை வழங்குகிறது. மேலும் யுஎஸ்பி மூலம் இதற்கு 500 எம்எ மின் திறன் கிடைக்கிறது.

அடுத்ததாக எச் எஸ்-டபுள்யு1 யுஎஸ்பி வயர்லஸ் ஹெட்செட்டின் பரப்பைப் பார்த்தால் அது 180 x 175 x 65 மிமீ ஆகும். மேலும் இதன் எடை 65 கிராம் மட்டுமே. அதுபோல் இது வைபை 2.4 ஜிஹெர்ட்ஸ் அட்வான்ஸ்டு 2 வே டிஜிட்டல் ட்ரான்ஸ்மிஷன் வயர்லஸ் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது 15 மீட்டர் தூரத்திலிருந்து கூட இசையை சப்போர்ட் செய்யும் வசதி கொண்டுள்ளது.

மேலும் இவை அல்ட்ரா உயர்தர செயல் திறன் கொண்ட 40 மிமீ ஹெட்செட் ஸ்பீக்கர்களைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இரைச்சல் தடுப்பு வசதி கொண்ட ஹெட்செட் மைக்ரோ போனையும் இந்த ஹெட்செட் வழங்குகிறது. இதன் ப்ரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 20 முதல் 20 கிஹெர்ட்ஸ் ஆகும். மேலும் இந்த ஹெட்செட் 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இதன் பேட்டரி லித்தியம் பாலிமர் வகையைச் சேர்ந்ததாகும்.

ஆசஸின் இந்த 2 டிவைஸ்களுமே மிகவும் அபாரமாக உள்ளன. இதன் எம்எஸ்-100 ஸ்பீக்கர்கள் 93 டெசிபல் இசையை வழங்கக்கூடியது. இதன் ஒலி அமைப்பும் அதே நேரத்தில் ப்ரீக்வன்சியும் மிக சூப்பராக உள்ளன. இது யுஎஸ்பி 2.0 மற்றும் 3.0 கொண்டுள்ளதால் இதை விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 இயங்கு தளங்களில் இயக்கத் துணை ட்ரைவர்கள் தேவைப்படாது.

எச்எஸ்-டபுள்யு1 வயர்லஸ் யுஎஸ்பி ஹெட்செட் க்ரிஸ்டல் க்ளியர் ஒலி அமைப்புடன் வருகிறது. இவற்றின் 70 மிமீ இயர் பேடுகள் மிகவும் மென்மையாக உள்ளன. இவற்றின் 2.4 ஜஹெர்ட்ஸ் வயர்லஸ் 2 வே டிஜிட்டில் ட்ரான்ஸ்மிஷன் தொழில் நுட்பம் மிக அபாரமான ஒலியை இந்த ஹெட்செட்டிற்கு வழங்குகிறது.

ஆசஸின் இந்த இரண்டு இசைப் பேழைகளின் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X