ஆஸ்ட்ரோ வழங்கும் அருமையான ஹெட்செட்!

By Karthikeyan
|
ஆஸ்ட்ரோ வழங்கும் அருமையான ஹெட்செட்!

ஆஸ்ட்ரோ கேமிங் நிறுவனம் ஒரு புதிய வயர்லஸ் ஆடியோ சிஸ்டத்தை உலகச் சந்தையில் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய இசைப் பேழைக்கு ஆஸ்ட்ரோ கேமிங் எ50 வயர்லஸ் ஹெட்செட் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த ஹெட்செட்டில் இருக்கும் வயர்லஸ் டோல்பி ஹெட்போன் 7.1 சரவுன்ட் சிஸ்டம் இந்த சாதனத்திற்கு முக்கியத்துவத்தைத் தருகிறது. மேலும் இந்த ஹெட்போன் பார்ப்பதற்கும் அட்டகாசமாக இருக்கிறது.

இந்த ஹெட்போன் சிவப்பு நிறத்தில் வருகிறது. அதோடு இதில் ஒரு மினி யுஎஸ்பி போர்ட், 2.5எம்எம் இன்புட் ஜாக் மற்றும் மிக்ஸ் ஆம் டிஎக்ஸ்டி வயர்லஸ் டிரான்ஸ்மிட்டர் போன்ற வசதிகளும் உள்ளன.

இந்த ஹெட்செட்டின் இடது இயர் கப்பில் மினி யுஎஸ்பி உள்ளது. இதன் மூலம் இந்த ஹெட்செட்டை ரீசார்ஜ் செய்ய முடியும். இதில் இருக்கும் 2.5எம்எம் இன்புட் ஜாக் மூலம் எக்பாஸ் லைவ் சாட் கேபிளோடு இணைக்க முடியும். மேலும் இதில் இருக்கும் மிக்ஸ் ஆம்ப் டிஎக்ஸ்டி வயர்லஸ் டிரான்ஸ்மிட்டர் மூலம் தகவல் பரிமாற்றத்தையும் சூப்பராக செய்ய முடியும்.

இந்த ஹெட்செட்டில் இருக்கும் 5.8 ஜிஹெர்ட்ஸ் வயர்லஸ் தொழில் நுட்பம் உயர்தர ப்ரீக்வன்சியை வழங்கும். அதோடு இந்த ஹெட்செட்டை எல்லா இசை சாதனங்களோடும் இணைக்க முடியும்.

இந்த புதிய ஹெட்செட் மிகத் தரமான மற்றும் துல்லியமான இசையை வழங்கும். இந்த ஹெட்செட் ரூ.16,000க்கு விற்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X