Home
Music

வீடியோ கேமிங்கிற்கு ஏற்ற சரியான ஹெட்செட்!

By Karthikeyan
 வீடியோ கேமிங்கிற்கு ஏற்ற சரியான ஹெட்செட்!

டோல்பி டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வரும் ஹெட்போன்கள் வீடியோ கேம் அனுபவத்தை மெருகூட்டுகின்றன. அப்படிப்பட்ட ஹெட்போன்கள் நிறைய சந்தையில் கிடைக்கின்றன.அந்த வகையில், வீடியோகேம் பிரியரிகளின் ஆர்வத்தை அதிகரிக்கக்கூடிய வகையில் வந்திருக்கும் புதிய ஹெட்போன் ஆஸ்ட்ரோ கேமிங் எ40 ஆடியோ சிஸ்டம் ஆகும்.

இந்த ஹெட்போன் மிகுந்த உயர்தரத்துடன் வருகிறது. தேவையான வயர் மற்றும் இயர்கப்புகள் போன்றவற்றை இந்த ஹெட்போனில் பார்க்க முடியும். இந்த ஆஸ்ட்ரோ ஹெட்போனின் முக்கிய சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இது ஆடியோபில் ஒலியை வழங்கக்கூடியது.

அதனால் இதன் ஒலி அமைப்பு மிக சூப்பராக இருக்கும். இதிலிருக்கும் எ40 மைக் வெளிப்புறத்திலிருந்து வரும் சப்தங்களைத் முழுவதுமாகத் தடுத்துவிடும். இந்த ஹெட்போனிலிருக்கும் ஒலி கட்டுப்படுத்தும் வசதி கேம் மற்றும் அதன் குரல் போன்றவற்றைத் தனியாகப் பிரித்துக் கொடுக்கும் வசதியை வழங்குகிறது.

இது ஒரு அடக்கமான ஹெட்போன் ஆகும். இதை அணிந்து கொள்வதும் மிக வசதியாக இருக்கும். அதுபோல் இது நெகிழ்வு தன்மை கொண்டிருப்பதால் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்த முடியும். அதுபோல இது நீண்ட ஆயுளையும் கொண்டிருக்கிறது.

குறிப்பாக வீடியோ கேம் விளையாடுவதற்கு இந்த ஹெட்செட் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இந்த ஹெட்போனை ஐபோன் மற்றும் பிற சாதனங்களில் மிக எளிதாக பொருத்த முடியும். மேலும் இதில் க்யுடி கேபிள் சிஸ்டம் இருப்பதால் கேமிங் டிவைசோடு இந்த ஹெட்செட்டை மிக எளிதாக ட்யூன் செய்ய முடியும்.

சரியான ஒலியமைப்பு இல்லையானால் வீடியோகேம் விளையாடுவது நன்றாக இருக்காது. இந்த ஆஸ்ட்ரோ கேமிங் ஹெட்செட்டில் இருக்கும் ஒலி அமைப்பு சூப்பராக இருக்கிறது. அதாவது எப்படிப்பட்ட விளையாட்டாக இருந்தாலும் இந்த ஹெட்செட் மிக அருமையான ஒலியைமைப்பை கொடுக்கும். இந்த ஹெட்செட்டின் விலை ரூ.15000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X