சஃபுள், கிளாசிக் ஐபோட் உற்பத்தியை நிறுத்த ஆப்பிள் திட்டம்

சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் சாதனம் வாடிக்கையாளர்களிடேயே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. குறைந்த விலையில் தரமாகவும், அதேவேளை அதிக வசதிகளுடன் வரும் ஐபோட் சாதனத்தை விஞ்சுவதற்கு போட்டியாக வேறு ஒரு சாதனம் இல்லை என்று கூறலாம்.
2ஜிபி மற்றும் 4ஜிபி சேமிப்பு திறனை கொண்ட ஐபோட் சஃபுள் 15 மணிநேரம் பேக்கப் கொண்ட பேட்டரியை கொடுக்கும். இதேபோன்று,டச் ஸ்கிரீன், 160ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ஐபாட் கிளாசிக்கில் 40,000 பாடல்களையும், 25,000 புகைப்படங்களையும் சேமித்து வைக்கும் திறன் கொண்டது.
இந்தியாவில் ஐபாட் சஃபுள் ரூ.3,200 முதல் ரூ.4,200 விலையிலும், ஐபாட் கிளாசிக் ரூ.12,500 விலையிலும் விற்கப்படுகிறது. இந்த நிலையில், ஐபாட் உற்பத்தியை திடீரென நிறுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், நாளை நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் ஆப்பிள் நிறுவனம் இதுகுறித்து முறைப்படி அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது இசைப் பிரியர்களின் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், ஐபாட் சஃபுள் மற்றும் கிளாசிக் மாடல்களுக்கு பதிலாக புதிய ஐபாட் மாடலை அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. ஆனால், புதிதாக வரும் ஐபாட் எந்த விலையில் வரும் என்பது குறித்த முழுமையாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications