Home
Music

புதிய வசதிகளுடன் வரும் ஆப்பிள் ஐபாட்கள்

By Super
புதிய வசதிகளுடன் வரும் ஆப்பிள் ஐபாட்கள்
இந்த அக்டோபர் மாதத்தை ஆப்பிளின் மாதம் என்று அழைக்கலாம். புதிய ஐபோன், புதிய ஐபோட் என மார்க்கெட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது ஆப்பிள்.

ஐபாட் ரசிகர்களின் ரசனைக்கேற்ப புதிய ஐபாட்களை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

ஐபோட் நானோ மற்றும் ஐபோட் டச் ஆகிய இரண்டு ஐபாட்களை ஆப்பிள் நிறுவனம் மார்க்கெட்டிற்கு கொண்டு வருகிறது.

இந்த புதிய ஐபாட்களில் ரசிகர்கள் சிறந்த இசையைக் கேட்டு திளைக்கலாம். இந்த இரண்டு ஐபோடுகளிலும் கண்டிப்பாக ஐக்ளவ்ட் வசதி இருக்கும். அதன் மூலம் இணையதளம் மூலமாக மீடியா லைப்ரரியிலிருந்த எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் இவை 8ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபிகளில் வருகின்றன. ஐபோட் நானோவும் மல்டி டச் டிஸ்ப்ளே மர்றும் ட்ராக்கிங் அப்ளிகேசன் கொண்டு வருகிறது. அதனால் நடக்கும் போதும் மற்றும் ஓடும்போடதும் கூட நாம் ட்ராக் செய்ய முடியும்.

ஐபோட் நானோ 3.6 இன்ச் உயரமும், 1.5 இன்ச் அகலமும், 36.4 கிராம் எடையும் கொண்டிருக்கிறது. இதன் 8ஜிபியில் 14000 பாடல்களை சேமிக்க முடியும். மேலும் இதன் பேட்டரி 16 மணி நேர வீடியோ ப்ளேபேக்கை தாங்கக் கூடிய சக்தி கொண்டது.

அதுபோல் இதில் ஸ்போக்கன் மெனுக்களும் மற்றும் பெரிதாக்கக்கூடிய பாண்டுகளும் உள்ளன. இதன் பேக்லைட்டை நாம் எளிதில் சரி செய்து கொள்ளலாம். இதன் 2.2 இண்ட் டயக்கோனல் டிஸ்ப்ளே 240X376 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது.

ஆப்பிள் ஐபோட் டச்சை எடுத்துக் கொண்டால் இது கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது. இது 4.4 இன்ச் உயரமும் 2.32 இன்ச் அகலமும் .28 இன்ச் அடர்த்தியும் மற்றும் 101 கிராம் எடையும் கொண்டிருக்கிறது. இது மிக மெல்லிய ஐபோடாகும்.

இது 8, 32 மற்றும் 64 ஜிபிகளில் வருகிறது. இதன் டயக்கோனல் திரை 3.5 இன்ச் ஆகும். இதன் திரை மல்டி டச் வசதி வாய்ந்தது. மேலும் வினாடிக்கு 30 பிரேம்கள் வரை இதன் விஜிஎ கேமரா மூலம் வீடியோ ரிக்கார்டிங் செய்ய முடியும். மேலும் இது இன்பில்ட் ஸ்பீக்கர்களுடன் 3.5 எம்எம் ஸ்டீரியோ ஹெட்போன் மினி ஜாக் கொண்டு வருகிறது.

ஐபோட் டச்சின் பேட்டரி 40 மணிநேர மீயூசிக் ப்ளேபேக்கும் அதே நேரத்தில் வீடியோ ப்ளேபேக்கை 7 மணி நேரம் இயக்கக்கூடிய வசதியும் கொண்டது. மேலும் இதில் பல மொழி வசதியும் உண்டு. இந்த இரண்டு ஐபோடுகளும் வந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள் என நம்பலாம்.

இதன் விலையைப் பார்த்தால் ஐபோட் டச் 8ஜிபி ரூ. 9750க்கும் 32ஜிபி ரூ.14750க்கும், 64ஜிபி ரூ.19,650க்கும் கிடைக்கும். அதுபோல் ஐபோட் நானோ ரூ. 10,000க்கு கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X