புது மெருகு பெறும் ஆப்பிள் ஐபாட் டச்!

இந்த நிலையில் அடுத்த தலைமுறை ஐபாட் டச் ஆச்சரியமூட்டும் வசதிகளுடன் வருகிறது. இந்த புதிய ஐபோட் டச் மிகவும் மெல்லியதாக இருக்கும். இதன் மொத்த பரப்பு 110மிமீ X 58.9மிமீ X 7.2மிமீ ஆகும். இதன் மொத்த எடை 101 கிராம் மட்டுமே. மேலும் இது கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய 2 நிறங்களில் வருகிறது.
புதிய ஐபாட் டச் உச்சியில் கேமரா இருக்கிறது. மொத்தம் 3 பட்டன்கள் மட்டுமே உள்ளன. ஸ்லிப் அல்லது வேக் பட்டன் இதன் உச்சியில் உள்ளது. ஒலி அளவு கட்டுப்பாட்டு பட்டன்கள் இதன் டிஸ்ப்ளேயின் கீழ் 2 புறங்களிலும் உள்ளன.
இதன் டிஸ்ப்ளே 3.5 இன்ச் அளவைக் கொண்டது. மேலும் இந்த டிஸ்ப்ளே மல்டி டச் வசதி கொண்டது. இதன் திரையில் ரிசலூசன் 960 x 640 பிக்சல் ஆகும். இதன் எல்சிடி பேக்லிட் டிஸ்ப்ளேதான் உயர்தர ரிசலூசனை இதுவரையிலும் கொண்டிருக்கிறது. இதன் திரையில் படங்கள் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் தெரியும்.
ஐபாட் முன்புறமும் பின்புறமுமாக 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. பின்புறம் உள்ள கேமரா மூலம் அருமையான படங்களை எடுக்கலாம். அந்த கேமராவின் ரிசலூசன் 960 x 720 பிக்சல் ஆகும். இந்த கேமரா 720பி வீடியோவை ரிக்கார்ட் செய்யும் வசதி கொண்டது.
இதில் வீடியோவும் மிகத் தெளிவாக இருக்கும். இதில் உள்ள மைக்ரோபோன் ஆடியோ மற்றும் வீடியோ உரையாடல்களை மிக அருமையாக பதிவு செய்யும். இதன் முன்புற கேமரா வீடியோ உரையாடலுக்கு உதவியாக இருக்கும்.
அடுத்த முக்கிய சிறப்பு என்னவென்றால் ஆப்பிள் ஏர்பிளே வசதியை வழங்குகிறது. இதன் மூலம் எச்டி டிவிக்கு ஆடியோ அல்லது வீடியோ மற்றும் படங்களை அனுப்ப முடியும். மேலும் டிவியோடு இந்த டிவைசை இணைப்பதற்கு கேபிள் தேவையில்லை.
ஆப்பிள் ஐபோட் டச் மெமரியின் அடிப்படையில் 8ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி என்று 3 பிரிவுகளாக வருகிறது. 8ஜிபி ரூ.10,500க்கும், 32ஜிபி ரூ.15,600க்கும் மற்றும் 64ஜிபி ரூ.21,000க்கும் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications