Home
Music

சாதனை படைக்க வரும் புதிய ஆப்பிள் ஹெட்போன்!

By Super
சாதனை படைக்க வரும் புதிய ஆப்பிள் ஹெட்போன்!

ஆப்பிள் சாதனங்களின் ஸ்டைல் எப்போதுமே அலாதியாக இருக்கும். குறிப்பாக ஆப்பிள் மேக், ஐபோன் போன்றவை தனித்துவம் வாய்ந்த வடிவமைப்பும் தரமும் கொண்டதாக இருக்கின்றன. இதுபோல் ஆப்பிளின் ஹெட்போன்களும் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.

வாடிக்கையாளர்களின் அந்த விருப்பத்தை புரிந்துகொண்டு தற்போது வடிவமைப்பில் ஒரு ஹெட்போனை களமிறக்குகிறது ஆப்பிள். இது ஹேர்பேண்டைப் போன்ற வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கிறது.

இந்த புதிய ஆப்பிள் ஹேர்பேன் ஹெட்போன் சாங் ஹூன் லீ என்ற பிரபல டிஸைனரின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஹெட்போனை வடிவமைத்த சாங் லீதான் ஆப்பிளுக்கான கூல் ஐபேட் டோக்கிங் சாதனத்தையும் டிஸைன் செய்தவர். தற்போது வரும் இந்த ஆப்பிள் ஹேர்பேன்ட் ஹெட்போன் ஆப்பிளின் வாடிக்கையாளர்களைப் பெரிதாகக் கவரும் என நம்பப்படுகிறது.

ஆப்பிள் ஐமேக்ஸ், ஆப்பிள் ஹேர்பேண்ட் ஹெட்போன் மற்றும் மேக்புக்குகள் ஆகியவை ஸ்டைல் மற்றும் அலுமினிய கோட்டிங் ஆகியவற்றில் மிகவும் ஒத்திருக்கின்றன. இந்த ஆப்பிள் ஹேர்பேன்ட் ஹெட்போனில் ஆப்பிளின் முத்திரையும் இருக்கும். இந்த புதிய ஹெட்போனில் நீளத்தைக் கூட்டவும், குறைக்கவும் முடியும். இந்த ஹெட்போனை நமது காதுகளில் வெகு அழகாக பொருத்த முடியும்.

ஆனால் இந்த ஹெட்போன் இயர்பேடுகள் கொண்டு வராததால் இது வெளிப்புறத்தில் இருந்து வரும் இரைச்சைலைத் தடுக்குமா என்ற ஐயம் பலரிடம் உள்ளது. ஆனால் இந்த புதிய ஆப்பிளின் ஹேர்பேண்ட் ஹெட்போன் எல்லா விமர்சனங்களையும் கடந்து சாதனை படைக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X