விண்டோஸ் சாதனங்களுக்கான வயர்லஸ் ஸ்பீக்கர்!

Posted By: Karthikeyan
விண்டோஸ் சாதனங்களுக்கான வயர்லஸ் ஸ்பீக்கர்!

விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கும் சாதனங்களுக்காக அபெரியோன் நிறுவனம் ஒரு புதிய ஸ்பீக்கரைக் களமிறக்குகிறது. இந்த ஸ்பீக்கருக்கு அரிஸ் வயர்லஸ் ஸ்பீக்கர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த ஸ்பீக்கரை ஒரு பேக்கஜாகக் களமிறக்குகிறது. இந்த பேக்கஜில் ஸ்பீக்கர் மற்றும் அரிஸ் வயர்லஸ் கார்டு போன்றவை உள்ளன.

இந்த ஸ்பீக்கரை எர்த்நெட் அல்லது வயர்லஸ் கண்ட்ரோல் மூலம் விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்கும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் போன்றவற்றோடு இணைக்க முடியும்.

ஹோம் நெட்வொர்க் இணைப்பு மூலம் இந்த அரிஸ் வயர்லஸ் ஸ்பீக்கரில் சூப்பராக இசையைக் கேட்க முடியும். இந்த ஸ்பீக்கர் அலுமினிய தகட்டால் செய்யப்பட்டிருக்கிறது. இதில் இள்ள இரும்பு தகட்டை அகற்றும் வசதியும் உள்ளது.

இதில் உள்ள 6 ஸ்பீக்கர்கள் மூலம் இந்த ஸ்பீக்கர் சூப்பரான அதிரடியான இசையை வழங்கும். மேலும் இந்த ஸ்பீக்கர் 2 பேசிவ் ரேடியேட்டர்களையும் மற்றும் 4 சக்தியான ட்ரைவர்களையும் கொண்டுள்ளன. அதனால் இந்த ஸ்பீக்கர் சூப்பரான இசை அனுபவத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த அபெரியோன் அரிஸ் வயர்லஸ் ஸ்பீக்கர் 3 சவண்டு மாடல்களுடன் வருகிறது. அதோடு இது டிஎல்என்எ சப்போர்ட்டும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்பீக்கர் விரைவில் சந்தைக்கு வந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

இந்த அபெரியோன் ஸ்பீக்கரின் விலை ரூ.25000 ஆகும். இந்த ஸ்பீக்கர் 1 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot