ஏப்ரியோன் வழங்கும் புதிய வயர்லெஸ் மியூசிக் சிஸ்டம்

Posted By: Staff

ஏப்ரியோன் வழங்கும் புதிய வயர்லெஸ் மியூசிக் சிஸ்டம்
வயர்லஸ் இசை சாதனங்களுக்கான மோகம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக மக்கள் வயர்லஸ் வசதியுடன் வரும் ஸ்பீக்கர் மற்றும் ஆடியோ சார்ந்த வயர்லஸ் கருவிகளையே வாங்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

மக்களின் இந்த இசைத் தாகத்தை நிவர்த்தி செய்ய அஸ்பெரியோன் நிறுவனம் சோனா ஹால் என்ற புதிய வயர்லஸ் இசை கருவியை களமிரக்க இருக்கிறது. இந்த புதிய இசைக் கருவி மூலம் நாம் வீட்டில் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இசையை கேட்க முடியும்.

இதன் தொடர்பு வசதி மிகவும் எளிமையாக இருக்கிறது. அதாவது அனுப்புவரும், பெறுபவரும் மட்டும் இருந்தால் போதும். அதாவது டிஜிட்டல் ஆடியோ சிக்னல்கள் அனுப்புவரின் யுனிட்டிலிருந்து பெறுபவரின் யுனிட்டுக்கு எளிதாக மாற்றப்படும்.

இந்த புதிய வேறொரு டிஜிட்டல் டிவைசோடு இந்த சோனா ஹாலை இணைத்து விட்டால் நாம் இசையைக் கேட்கலாம். இதை எல்லா மல்டி மீடியா ஆடியோ ப்ளேயர்களுடன் குறிப்பாக எம்பி3 ப்ளேயர் மற்றும் ஆடியோ சிஸ்டத்துடன் இணைக்க முடியும். மேலும் இதிலுள்ள யுஎஸ்பி போர்ட் மூலம் கணனியோடும் இதை இணைக்க முடியும்.

ஏற்கனவே கூறியது போல் இங்கு அனுப்புவரும் பெறுபவரும் இருக்க வேண்டும். அதாவது அனுப்புவர் மியூசிக் ப்ளேயரோடும் பெறுபவர் ஸ்பீக்கர்களோடும் தொடர்பு கொள்ள வேண்டும். இது ஒரு மிகச் சாதாரணமான எளிய முறையாகும்.

இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் இதை வீட்டில் ஏதாவது ஒரு பகுதியில் வைத்து விட்டால் போதும். நாம் படுக்கை அறையில் இருந்தாலும் அல்லது சமையல் அறையில் இருந்தாலும் நாம் இசையை அற்புதமாக கேட்கலாம். மேலும் இதன் ஒலி அமைப்பு மிகவும் துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று அஸ்பெரியோன் நிறுவனம் உறுதி அளிக்கிறது.

இதை ஒரு எளிய இசை கேட்பதற்கான கருவி என்ற அழைக்கலாம். இதை வீட்டிலுள்ள எல்லா அறைகளுக்கும் தூக்கிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும் வீட்டில் நாம் எங்கு இருந்தாலும் ஒரே அளவில் நாம் இசையை அனுபவிக்க முடியும்.

இந்த புதிய சோனா ஹால் விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.6,700 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot