Home
Music

கதிர் வீச்சை தடுக்கும் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெட்செட்!

By Super
கதிர் வீச்சை தடுக்கும் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெட்செட்!

ஹேண்ட்ஸ் ப்ரீ வசதி கொண்ட சாதனங்களை வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். குறிப்பாக, இதில் ப்ளூடூத் ஹெட்செட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், அதன் அதிக கதிர்வீச்சுத்தான் அவர்களை பயமுறுத்துகின்றன.

இந்த குறையை போக்கும் வகையில் கதிர்வீச்சு தடுப்பு தொழில்நுட்பத்துடன் புதிய ஹெட்செட்டுகள் மார்கெட்டுக்கு வந்துள்ளன. இவை மொபைல்போனிலிருந்து வெளிவரும் கதிர் வீச்சையும் தடு்ககும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐமொபிபோன்ஸ் ப்ளூடூத் ஹெட்செட்டுகளின் சிறப்புகளைப் பார்த்தால் இந்த ஹெட்செட்டுகள் பார்ப்பதற்கு ஸ்டைலாக சூப்பராக இருக்கின்றன. இதன் ஒலி அமைப்பு மிகத் தெளிவாக இருக்கும். அதுபோல் இதில் கதிர்வீச்சும் மிகக் குறைவாக இருக்கும்.

இந்த ஐமொபிபோன் ஹெட்செட்டுகள் பார்ப்பதற்கு சாதராண லேண்ட் லைன் போன் ரிசிரைப் போல தோன்றும். இதற்கு வயரும் உள்ளது. இது ஒரு சாதாரண மொபைல் ஹெட்செட் ஆகும். ஆனால் இது மொபைலிலிருந்து வரும் 98% கதிர்வீச்சைத் தடுத்து விடும்.

குறிப்பாக மொபைலை அதிகமாக பயன்படுத்தும் போது மூளை சம்பந்தமான நோய்கள் எற்பட வாய்ப்புகள் அதிகம். அதுவும் புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்த ஹெட்செட்டை மொபைல்களில் பயன்படுத்தினால் இத்தகைய நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

ஐபோன்களில் எளிதாக இணைக்கும் வகையில் வந்துள்ள இந்த ஐமொபிபோன் ஹெட்செட்டுகளை விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்ள முடியும். இந்த ப்ளூடூத் ஹெட்செட்டின் விலை ரூ.1,200 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X