ரூ.2,000 விலையில் புதிய ஹெட்போன்?

Posted By: Staff
ரூ.2,000 விலையில் புதிய ஹெட்போன்?

மினிஸ்ட்ரி ஆப் சவுண்ட் தனது பல ஆண்டு அனுபவத்தின் காரணமாக எலக்ட்ரானிக் மற்றும் ஆடியோ துறையில் நற்பெயரைப் பெற்றுள்ளது. தற்போது அந்நிறுவனம் ஒரு அம்சமான ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

தனது 20 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், இந்த ஹெட்செட்டை களமிறக்குகிறது.

எம்ஒஎஸ் 005 என்ற பெயரில் இந்த ஹெட்போன் 3 மாடல்களில் வருகிறது. அதாவது காதுகளுக்குள் பொருத்தக்கூடிய மற்றும் காதுகளுக்கு மேல் பொருத்தக்கூடிய மற்றும் நவீன முறை ஹெட்போன் என 3 பிரிவுகளில் வருகிறது.

இந்த எம்ஒஎஸ் 005 ஹெட்போன்கள் மிக ஸ்டலாக இருக்கின்றன. அதுபோல் இதன் இயர்பேடுகளும் மிக மென்மையான ரப்பரால் செய்யப்பட்டு காதுகளுக்கு மிருதுவாக இருக்கின்றன.

இந்த எம்ஒஎஸ்005 ஹெட்போன்களில் சிறப்புகளைப் பார்த்தால் அவை மிகவும் எடை குறைந்து இருக்கின்றன. இவை நெகிழ்வு தன்மை கொண்டவையாக உள்ளதால் வளைக்க முடியும். இது 50மிமீ டிரைவர் டயாமீட்டர் கொண்டுள்ளதால் இதன் இசை பிரமாதமாக இருக்கும். மேலும் இந்த ஹெட்போனை மடக்கி பத்திரமாக வைக்க முடியும்.

இந்த புதிய ஹெட்போன் 3.5மிமீ ஸ்டேண்டர்டு ஜாக் கொண்டுள்ளது. அதுபோல் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. இது 32 ஓம் இம்பீடன்சைக் கொண்டுள்ளது. அதுபோல் 1.5மீ ஆன்டி டேங்கிள் ரப்பர் கேபிளையும் கொண்டிருக்கிறது. இதன் சென்சிட்டிவிட்டி 103 டிபி ஆகும்.

இந்த ஹெட்போனின் சிறிய குறைகளாகப் பார்த்தால் இவற்றை காதுகளில் அணிந்த சிறிது நேரத்தில் எரிச்சைலை உண்டாக்குகிறது. இதன் பேஸ் இசை அருமையாக இருந்தாலும் இன்னும் சிறப்பாக இருந்திருந்திருக்கலாம். அதுபோல் இதன் ப்ரீக்வன்சீஸ்களும் அதிக அளவு இல்லை. மேலும் இது வயர் கொண்டு வருவதால் சிறிய சிரமங்களும் உண்டு.

ஆனால் இந்த எம்ஒஎஸ் ஹெட்போனை வெளியில் எடுத்துச் செல்வதற்கு அருமையாக இருக்கும். இந்த ஹெட்போனின் விலை ரூ.2000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot