ஆன்ட்ராய்டு வசதியுடன் புதுமையான வெப் ரேடியோ!

ஆர்க்கோஸ் 35 ஹோம் கனெக்ட் என்ற பெயரில் இந்த புதிய வெப் ரேடியோ வர இருக்கிறது. குறிப்பாக இது வீட்டில் பயன்படுத்துவதற்காகவே தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஆர்க்கோஸ் 35 ஹோம் கனெக்ட் வீட்டில் இருக்கும் ஸ்டேண்டர்டு ரேடியோக்களுக்கு மாற்றாக இருக்கும் என நம்பலாம்.
இந்த புதிய வெப் ரேடியோ ஒரு போர்ட்டபுள் இசை சாதனமாக இருக்கும். மேலும் இது அடக்கமாகவும் அதே நேரத்தில் சிறியதாகவும் உள்ளது. இதை இயக்குவதும் மிக எளிதாக இருக்கும்.
இந்த ஆர்க்கோஸ் 35 ஹோம் கனெக்ட் டிவைஸ் ட்யூன் இன் ரேடியோ ப்ரோ அப்ளிகேசன் மற்றும் அலார்ம் கடிகாரம் ஆகிய வசதிகள் கொண்டு வருகிறது. காலையில் நாம் அயர்ந்து தூங்கினாலும் இது நம்மை சரியான நேரத்தில் எழுப்பி விடும்.
ஆர்க்கோஸ் 35 ஹோம் கனெக்ட் டிவைசின் சிறப்புக்களைப் பார்த்தால் அது முதலில் சிறிய அதே நேரத்தில் அடக்கமான டிசைனுடன் வருகிறது. இதன் ஒலி அமைப்பு மிகவும் தரமாக இருக்கிறது. இதன் திரை தொடு வசதி கொண்டுள்ளது. அலாரம் வசதி கொண்ட கடிகாரம் இதன் சிறப்பு வசதியாகும். அதுபோல் இன்டக்ரேட்டட் ட்யூன் - இன் ரேடியோ ப்ரோ அப்ளிகேசன் கொண்டு வருகிறது.
இணைப்பு வசதிக்காக அதி வேகம் கொண்ட வைஃபை இணைப்பை வழங்குகிறது. மேலும் இந்த டிவைசில் 50,000 வெப் ரேடியோ ஸ்டேசன்களை ப்ரவுஸ் செய்ய முடியும். மேலும் இதை கையாள்வதும் மிகவும் எளிதாக இருக்கும். இது ஒரு ஆன்ட்ராய்டு டிவைசாக இருப்பதால் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை இதில் பதிவிறக்கம் செய்ய முடியும். அதுபோல் இதில் சோஷியல் நெட்வொர்க்கிங் அப்ளிகேசன்கள் மற்றும் ஸ்ட்ரீம் வீடியோக்கள் சப்போர்ட்டையும் அனுபவிக்க முடியும்.
இதன் செயல் திறன் அமர்க்களப்படுத்துகிறது. இதில் உள்ள வைஃபை தொடர்பு வசதி மூலம் இந்த டிவைசில் வீடியோக்களைப் பார்க்க முடியும். வானிலை தகவல்கள் மற்றும் செய்திகளையும் பார்க்க முடியும்.
இவ்வளவு ஏராளமான வசதிகளை வழங்கும் இந்த ஆர்க்கோஸ் 35 ஹோம் கனெக்ட் வெப் ரேடியோ ரூ.8,000 விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆர்க்கோசின் கடைகள் மற்றும் அமேசான் மற்றும் பிற வெப்சைட்டுகளில் பெற முடியும்.


Click it and Unblock the Notifications