தூக்கத்துக்கு கியர் போடும் புதிய ஐபோன் ஸ்பீக்கர்!

சூப்பரான ஐபோன் அக்சஸரிகளைத் தயாரித்து வழங்கும் கியர்4 நிறுவனம் சமீபத்தில் இந்திய கணினி சந்தையி்ல ஒரு புதிய ஐபோன் டோக்கைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய ஐபோன் டோக்கிற்கு ரினியூவ் ஸ்லீப் க்ளாக் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த புதிய சாதனம் தூங்கும் போது தூங்குபவரின் செயல்பாடுகளைக் கண்கானிக்கும் அதே நேரத்தில் ஐபோன், ஐபேட் மற்றும் ஐபோடு சாதனங்களுக்கு சிறந்த ஸ்பீக்கராகவும் இருக்கும். அதானால் இந்த புதிய சாதனம் இந்திய மக்களை வெகுவாக கவரும் என்று கியர்4 நம்புகிறது.
ஆனால் இதன் விலை மட்டும் சற்று அதிகமாக இருக்கிறது. அதாவது இந்த சாதனம் ரூ.20,000க்கு விற்கப்பட இருக்கிறது. எனினும் இந்த சாதனம் பல வேலைகளைச் செய்யும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக ஐபோன், ஐபோட் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கு ஒரு சிறந்த ஸ்பீக்கராக இருக்கும்.
இரண்டாவதாக இதில் ஒரு ஸ்லீப் மானிட்டர் உள்ளதால் தூங்கும் போது தூங்குபவரின் செயல்பாடுகளைக் கண்கானிக்கும் சக்தியும் கொண்டது. அதனால் இந்த கருவியின் மூலம் உண்மையான தூங்கும் நேரத்தைக் கணக்கிட முடியும். மேலும் தூக்கம் வராமல் துன்பப்படுபவருக்கும் இந்த கருவி மிகவும் உதவிகரமாக இருக்கும்.
மேலும் இந்த கருவி சூப்பராக தன்னை மறந்து தூங்குவதற்கான வழிமுறைகளையும் அளிக்கும். இரவில் உழைத்து பகலில் தூங்கும் ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இந்த சாதனம் ஒரு தோழனாகவே இருக்கும் என்று நம்பலாம். அதோடு அவர்களின் தூக்க நேரம், தூக்கத்தின் தன்மை இந்த கருவியைக் கொண்டு ஆய்வு செய்யவும் முடியும்.
இது ஒரு கான்டாக்ட் ப்ரீ சாதனம் ஆகும். இதைப் பயன்படுத்துவதும் மிக எளிதாக இருக்கும். அதே நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுவதற்கும் இந்த கருவியில் டைம் செட் செய்ய முடியும்.
இந்த கருவி பல காரியங்களைச் செய்யும் ஆற்றல் கொண்டது. இதை ஆப்பிள் சாதனங்களோடு பொருத்தி இனிமையான இசையையும் கேட்கலாம். அதே நேரத்தில் தூங்குவதற்கு உதவி செய்யும் தோழனாகவும் இந்த கருவியைப் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications