விருது வெல்லுமா போனாக் ஹெட்போன்?

Posted By: Staff
விருது வெல்லுமா போனாக் ஹெட்போன்?

சந்தையில் நாளுக்கு நாள் ஏராளமான ஹெட்போன்கள் வருகின்றன. மேலும் ஹெட்போனின் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

தற்போது போனாக் நிறுவனம் புதிதாக பிஎப்இ 232 என்ற ஹெட்போனைக் களமிறக்குகிறது. இந்த புதிய ஹெட்போன் அபாரமான இசையை வழங்குகிறது.

இந்த பிஎப்இ 232 ஹெட்போனின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் அது பிரித்து எடுக்கக்கூடிய கேபிளைக் கொண்டுள்ளது. இது ரிமோட் கண்ட்ரோல் வசதி கொண்டுள்ளது. அதுபோல் இன்லைன் மைக்ரோபோனும் கொண்டுள்ளது. அதோடு ஆர்மச்சூப் டிரைவர்கள், சவுண்ட் ஆல்டரிங் பில்டர்ஸ் மற்றும் பஞ்சு மற்றும் ரப்போர் டிப்ஸ்களைக் கொண்டுள்ளது. இதன் ஒலி கிரிஸ்ப் மற்றும் க்ளியர் வசதி கொண்டு மிக அபாரமாக இருக்கும்.

இந்த புதிய பிஎப்இ ஹெட்போனின் முந்தைய அறிமுகமான பிஎப்இ012 ஹெட்போன் 2011 ஆண்டின் ஹெட்போன் விருதில் 2வது இடத்தைப் பிடித்தது. இதன் டிசைன் மிக அருமையாக உள்ளது. இதன் இயர் பட்சுக்கள் ப்ளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஹெட்போனில் உள்ள தனியாக பிரித்து எடுக்கக் கூடிய கேபிள்கள் இந்த ஹெட்போனுக்கு சிறப்பை சேர்க்கின்றன. இந்த ஹெட்போனை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். மேலும் இதன் வயருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலும் புதிய வயரை மாற்றிக் கொள்ளலாம். இதன் இணைப்பு ஜாக்குகளும் சூப்பராக உள்ளன.

இந்த ஹெட்போன் 2 இணைந்த கேபிள்களைக் கொண்டு வருகின்றன. ஒரு கேபிள் மைக்ரோபோன் அல்லது ரிமோட் ஹவுசிங்கைக் கொண்டிருக்கிறது. இந்த கேபிள்களின் முடிவில் ரைட் ஆங்கிள் ஜாக்கும் உள்ளது.

இந்த ஹெட்போனின் ஒலி அமைப்பு நச்சென்று இருக்கும். இந்த போனாக் ஹெட்போனின் விலை ரூ.30,000 ஆகும். இது உயர்தர ஹெட்போன் ஆகும். இதன் விலை அதிகமாகத் தெரிந்தாலும் இதன் செயல் திறன் மிக அபாரமாக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot