கிரிஸ்டல் இசை வழங்கும் புதிய ப்ளூடூத் ஹெட்போன்!

Posted By: Staff
 கிரிஸ்டல் இசை வழங்கும் புதிய ப்ளூடூத் ஹெட்போன்!

வீடுகளுக்கான டிஜிட்டல் பொருள்களைத் தயாரித்து வழங்குவதில் ஆம்கெட் மிகவும் பிரபலமான ஒரு நிறுவனம் ஆகும். இப்போது இந்த ஆம்கெட் நிறுவனம் ஒரு ப்ளூடூத் ஹெட்போனை இந்தியாவில் களமிறக்கவிருக்கிறது. இந்த ஹெட்போனின் பெயர் ட்ரூபீட்ஸ் ஏர் பிடி ஆகும்.

குறிப்பாக ப்ளூடூத் வசதியுள்ள லேப்டாப்புகள், கணினிகள் மற்றும் மொபைல்களில் இந்த ட்ரூபீட்ஸ் ஹெட்போனை மிக எளிதாக இணைக்க முடியும். இந்த ஹெட்போன் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இதை இயக்குவது மிக எளிதாகும். இந்த ஹெட்போனில் இசை கேட்கலாம் அதே நேரத்தில் அழைப்பைப் பெறலாம். மேலும் அழைக்கவும் முடியும். இந்த ஹெட்போன் ஆப்டி பிட் இயர் பட்சுக்களைக் கொண்டுள்ளது. இந்த இயர்பட்சுக்கள் தரமான க்ரிஸ்டல் க்ளியர் ஒலியைத் தருவது மட்டும் அல்லாமல் வெளிப்புறத்திலிருந்து வரும் இரைச்சலையும் தடுக்கிறது.

இந்த ட்ரூபீட்ஸ் ஹெட்போனின் ஒலி கட்டுப்பாட்டைக் கையாள்வது மிகவும் எளிதாக இருக்கும். இந்த ஹெட்போன் கால் மற்றும் ட்ராக் கட்டுபாடுகளைக் கொண்டுள்ளது. அதுபோல் இதன் ஓம்னி டைரக்சனல் மைக் மிகவும் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும். இந்த ஹெட்போனை வயர்லஸ் ப்ளூடூத் வசதியுள்ள டேப்லெட்டுகள், ப்ளாக்பெரி மொபைல்கள், ஆன்ட்ராய்டு போன்கள் போன்றவற்றை மிக எளிதாக சப்போர்ட் செய்யும்.

நகர வாழ்க்கை எப்போதுமே பரபரப்பாக இருக்கும். இப்படிப்பட்ட பரபரப்பும், இரைச்சலும் மிகுந்த நகர் பகுதிகளில் அழைப்பு செய்வது மற்றும் அழைப்பை எடுப்பது என்பது மிகவும் சவாலான காரியம் ஆகும். நாம் பேசுவது அவர்களுக்குக் கேட்காது. அவர்கள் பேசுவது நமக்குக் கேட்காது.

ஆனால் இந்த ட்ரூபீட்ஸ் ஹெட்போன் இந்த சிரமத்தை மிக எளிதாக்குகிறது. இது வெளிப்புற இரைச்சலைத் தடுத்து விடுவதால் நாம் தெளிவாக பேசவோ அல்லது கேட்கவோ முடியும். அதே நேரத்தில் இந்த ஹெட்போன் மிகத் தரமான இசையையும் வழங்குகிறது.

ஆம்கெட்டின் இயக்குனர் கூறும் போது இந்த ட்ரூபீட்ஸ் ஹெட்போன் மிகச் சிறந்த மேக்னெட்டிக் மற்றும் ஆடியோ எலக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்துடன் வருகிறது என்று கூறுகிறார். இந்த ட்ரூபீட்ஸ் ஹெட்போனின் விலை ரூ.2,400 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot