Home
Music

ஐபாட், ஐபோனுக்கு புதிய டோக்கிங் மியூசிக் சாதனம்!

By Super
ஐபாட், ஐபோனுக்கு புதிய டோக்கிங் மியூசிக் சாதனம்!

தற்போது ஏராளமான ஐபாட் டோக்கிங் சாதனங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றில் பல வடிவமைப்பில் தரமாக இருந்தாலும், சிறந்த ஒலி அமைப்பை வழங்குவதில்லை.

ஆல்டெக் லேன்சிங் நிறுவனம் ஆக்டிவ் டூவோ மற்றும் எம்202 என்று அழைக்கப்படும் ஐபாட் டோக்கை களமிறக்குகிறது. இதன் சிறப்புகள் தனித்தன்மை வாய்ந்தவை.

இந்த எம்202 ஆக்டிவ் டூவோவை எடுத்துக் கொண்டால் இந்த டிசைன் மிக அழகாக இருக்கிறது. இது மரத்தால் செய்யப்பட்டுள்ளது. இதில் நியோடியம் டிரைவர்கள் உள்ளன. 2 ஐபாட் அல்லது ஐபோன் ஹோல்டர்கள் உள்ளன. அதுபோல் இன்டிக்கேட்டர் விளக்குகளும் உள்ளன. ரிமோட்டுக்காக மேக்னட்டிக் ஹோல்டரும் உள்ளது. இணைப்புக்காக யுஎஸ்பி போர்ட் உள்ளது.

இந்த டிவைசின் அடுத்த சிறப்பு இதன் மியூசிக் மிக்ஸ் அப்ளிகேசன் ஆகும். மேலும், அலாரம் கடிகார வசதியும் இதில் உள்ளது. இந்த டிவைசை இயக்குவது மிக எளிதாக இருக்கும். அதுபோல் இதிலிருந்து வரும் இசை மிக அபாரமாக இருக்கும். இதன் விலையும் குறைவாக இருக்கும்.

இந்த எம்202 ஆக்டிவ் டூவோ டிவைஸ் ஒரு தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளது.. இதன் ஸ்பீக்கர்கள் இந்த பையின் தளத்தில் உள்ளன. மற்ற கட்டுப்பாட்டுப் பட்டன்கள் அனைத்தும் பையின் மறுபுறம் உள்ளன. இந்த பையின் மேல் 2 ஐபாட்கள் அல்லது ஐபோன்கள் வைப்பதற்கான டோக்கிங் துவாரங்கள் உள்ளன.

இதன் முன்புறம் இருக்கும் 2 டிரைவர்கல் ஸ்டீரியோபோனிக் சவுண்ட் அவட்புட்டை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள இன்டிக்கேட்டர் விளக்குகள் எந்த டிவைசிலிருந்து மியூசிக் பைல்கள் வருகின்றன போன்ற தகவல்களைத் தெரிவிக்கிறது.

இதில் ஒரு துணை இன்புட் ஜாக்கும் அதுபோல் யுஎஸ்பி போர்ட்டும் உள்ளன. இந்த யுஎஸ்பி போர்ட் மூலமாக இது பைல்களை ப்ளே செய்யாது. இந்த போர்ட்டு சார்ஜ் செய்வதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் முன்புற துவாரத்தில் ரிமோட் கண்ட்ரோலை வைத்துக் கொள்ளலாம். இந்த டிவைசிலிருந்து வரும் இசை மிகவும் அருமையாக இருக்கிறது.

இந்த எம்202 ஆக்டிவ் டூவோ டிவைசின் விலை ரூ.7,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X