Home
Music

ஏகேஜி ஹெட்போன்... இரைச்சல் தொல்லை இனி இல்லை!

By Karthikeyan
ஏகேஜி ஹெட்போன்... இரைச்சல் தொல்லை இனி இல்லை!

எகேஜி கே459 என்ற ஒரு புதிய ஹெட்போன் களமிறங்கி இருக்கிறது. இந்த ஹெட்போனின் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த ஹெட்போனில் வெளிப்புறத்திலிருந்து வரும் சத்தம் மற்றும் போன்றவை நுழைய முடியாது. இந்த ஹெட்போனை யுஎஸ்பி மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும். மேலும் இதை மிக எளிதாக மடக்கி வைக்கவும் முடியும்.

நவீன இரைச்சல் தடுப்பு வசதி கொண்டு வரும் இந்த எகேஜி ஹெட்போன் ஒரு ஜோடியாக வருகிறது. இந்த ஹெட்போன் காதுகள் முழுவதையும் மூடிக்கொள்ளும். மேலும் இது இரைச்சல் தடுப்பு வசதி கொண்டிருப்பதால் இதில் மிகத் துல்லியமாக அதே நேரத்தில் சூப்பராக விரும்பும் பாடல்களைக் கேட்க முடியும்.

இந்த எகேஜி ஹெட்போன் மடக்கக் கூடிய ஹெட்பேன் மற்றும் தோலினால் ஆன இயர் கப்புகள் கொண்டிருப்பதால் இதை பயன்படுத்துவது மிக அம்சமாக இருக்கும். தலை மற்றும் காதுகளுக்கு இந்த ஹெட்போன் தொந்தரவு ஏற்படுத்தாது.

இந்த ஏகேஜி ஹெட்போனின் முக்கிய அம்சங்களாகப் பார்த்தால் இது எக்ஸ்ட்ராவாக துணியால் மூடப்பட்ட ஹெட்போன் கோர்டு கொண்டுள்ளது. மேலும் இது இன்லைன் ரிமோட் மற்றும் மைக்ரோபோன் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. அதனால் இதன் மூலம் அழைப்புகளை அனுப்புவதும் அல்லது எடுப்பதும் மிக எளிதாக இருக்கும். மேலும் இந்த ஹெட்போன் ஏர்ப்ளேன் பயன்பாட்டிற்காக 2 ப்ரோங்டு அடாப்டரையும் கொண்டுள்ளது. அதுபோல் இந்த ஹெட்போனில் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியும் உள்ளது.

அடுத்ததாக இந்த எகேஜி டேப்லெட் மடக்கக்கூடிய வகையில் உள்ளதால் இதை எடுத்துச் செல்வது மிக எளிதாக இருக்கும். அதுபோல் இதை இயக்குவதும மிக எளிதானது. இதன் இயர் கப்புகளில் எல் மற்றும் ஆர் எழுத்துக்கள் உள்ளதால் எந்த பக்க காதில் எந்த இயர் கப்பை அணிவது என்பதில் குழப்பம் இருக்காது. இந்த ஹெட்போனின் விலை ரூ.17,500 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X