Home
Music

சூப்பர் ஸ்பீட்.. 100 Mbps வேகம்.. 3333 GB டேட்டா.. ஏர்டெல் வழங்கும் தரமான திட்டம்.. விலை என்ன?

உங்கள் வீட்டிற்கு ஒரு தரமான இன்டர்நெட் அல்லது வைஃபை சேவையை பயன்படுத்த திட்டமிடுகிறீர்களா? அப்படியானால், நீங்கள் கட்டாயம் ஏர்டெல் வழங்கும் இந்த 100 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டத்தை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மை பற்றிய விபரங்கள் இதோ.

பார்தி ஏர்டெல் சமீபத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர் ஃபைபரை (Airtel Xstream AirFiber) அறிமுகப்படுத்தியுள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 100 எம்பிபிஎஸ் (100 Mbps) வேகத்தை வழங்குகிறது. இருப்பினும், உங்கள் இருப்பிடத்தில் ஏர்ஃபைபர் (AirFiber) சேவை கிடைக்கவில்லை என்றால், கொஞ்சம் காத்திருக்கவும்.

சூப்பர் ஸ்பீட்.. 100 Mbps வேகம்.. 3333 GB டேட்டா.. ஏர்டெல் திட்டம்..

ஆகஸ்டு வரை நிறுவனம் சுமார் 1,225 நகரங்களில் அதன் Airtel Xstream ஃபைபர் சேவையை வழங்குகிறது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் என்பது ஏர்டெல்லின் பிராட்பேண்ட் சேவை வழங்குவதாகும். உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய 100 Mbps நிலையான இணைப்பை பெறத் தேடுகிறீர்களானால் அல்லது உங்களிடம் இருக்கும் திட்டத்தை மாற்றத் திட்டமிட்டால், நீங்கள் இந்த திட்டத்தை கவனிக்க வேண்டியது அவசியம்.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் 100 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டம்: (Airtel Xstream AirFiber 100 Mbps Plan)
ஏர்டெல் நிறுவனம் புதிய 100 Mbps ஸ்டாண்டர்ட் திட்டத்தை மாதத்திற்கு ரூ.799 என்ற விலைக்கு வழங்குகிறது. இதில் வரம்பற்ற இணையம் மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் STD அழைப்புகள் போன்ற நன்மை கிடைக்கிறது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் மூலம், வைஃபை அழைப்பு, 24/7 வாடிக்கையாளர் ஆதரவு போன்ற சேவையும் கிடைக்கிறது.

ஆட்டோ ட்ரபிள்ஷூட்டிங் ரூட்டர்கள், ஆட்டோமேட்டிக் அப்லோட் மற்றும் டவுன்லோட் வேகம் மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட 24x7 திட்ட வேகம் போன்ற பலன்களை இந்த திட்டம் அனுபவிக்க வழங்குகிறது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் FTTH (ஃபைபர் டு ஹோம்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது வைஃபை ரூட்டர் மோடம் வழியாக 60 சாதனங்கள் வரை இணைக்கக்கூடிய முழுமையான ஃபைபர் ஆப்டிக் கேபிளை உங்களுக்கு வழங்குகிறது.

சூப்பர் ஸ்பீட்.. 100 Mbps வேகம்.. 3333 GB டேட்டா.. ஏர்டெல் திட்டம்..

இத்துடன் ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) நன்மைகள் கூட கிடைக்கிறது. ஏர்டெல் 100 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டத்தில் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளும் கிடைக்கிறது. இதில் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் விங்க் மியூசிக் நன்மைகளை வழங்குகிறது. ஏர்டெல்லின் ஸ்டாண்டர்ட் 100 எம்பிபிஎஸ் திட்டமானது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் பேக்கிற்கு 1 வருட இலவச சந்தாவுடன் வருகிறது. இதன் மதிப்பு ரூ.1,499 ஆகும்.

இதுமட்டுமின்றி, நீங்கள் ஏர்டெல் உடன் நீண்ட கால திட்டங்களை தேர்வு செய்யும் பட்சத்தில் கூடுதல் நன்மைகளை பெற முடியும். நீங்கள் 3 மாதங்கள், 6 மாதங்கள் அல்லது 12 மாதத் திட்டத்தைத் தேர்வுசெய்தால், ஏர்டெல் நிறுவல் கட்டணமான 1,500 ரூபாயை தள்ளுபடி செய்கிறது. 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் போன்ற நீண்ட காலத் திட்டத்தை நீங்கள் தேர்வுசெய்தால், முறையே 7.5 சதவீதம் மற்றும் 15 சதவீதம் கூடுதல் தள்ளுபடியைப் பெறுவீர்கள்.

இந்தத் திட்டம் நியாயமான பயன்பாட்டுக் கொள்கையுடன் வருகிறது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் இது 3,333 ஜிபி டேட்டாவை ஐப் பயன்படுத்திய பிறகு, வேகம் 2 Mbps ஆகக் குறைக்கப்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும். பயனர்கள் airtel.in/broadband/ என்ற இணைய முகவரி மூலம் இந்த திட்டத்தை வாங்கலாம்.

நீங்கள் ஆர்வமாக இருந்தால் ரூ.799 திட்டத்தை உங்கள் வட்டத்தில் கிடைக்கும் போது பெற்று பயன்பெறலாம். உங்கள் திட்டத்திற்கான அடிப்படை தகவல்களை ஆன்லைனில் பூர்த்தி செய்தவுடன் உங்களை நிறுவனம் நேரில் அல்லது அழைப்பு மூலம் தொடர்புகொள்ளும். பிறகு உங்களுக்கு ஏர்டெல்லின் ஏர் ஃபைபர் திட்டம் வழங்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Xstream AirFiber 100 Mbps Broadband Plan At Rs 799 Per Month
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X