முழுக்க முழுக்க குழுந்தைகளுக்காக ஓர் ஹெட்போன்!

Posted By: Karthikeyan
முழுக்க முழுக்க குழுந்தைகளுக்காக ஓர் ஹெட்போன்!

குழந்தைகள் எப்போதும் துறுதுறுப்புடன் இருக்கின்றனர். அவர்கள் எதையும் மிக வேகமாக ஆர்வத்தோடு கற்றுக் கொள்வார்கள். மேலும், மொபைல்போன், கம்ப்யூட்டர் என எலக்ட்ரானிக் சாதனங்கள் மீது அவர்கள் அதீத ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.

இதை உணர்ந்த நிறுவனங்கள் சிறுவர்களைக் கவர்வதற்காகவே புதிய புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகின்றன. அந்த வகையில் ஐகோ நிறுவனம் சிறுவர்களுக்காகவே ஏரியல்7 ஆர்கேட் ஹெட்போன் வரிசையை வெளியிடுகிறது.

இந்த ஹெட்போன்களின் அட்டகாசமான வண்ணங்களைப் பார்த்தாலே சிறுவர்கள் மிக எளிதாக மயங்கிவிடுவார்கள். குறிப்பாக இந்த ஹெட்போன்கள் சிறுவர்களின் தலையில் அணிந்து கொள்வதற்கு வசதியாக மிகச் சிறியதாக வருகிறது. ஆனால் இந்த ஹெட்போனின் செயல் திறன் மிக அபாரமாக இருக்கும்.

இந்த ஏரியல்7 ஹெட்போனின் ஒலி அமைப்பு மிக உயர்ந்த தரத்தில் இருக்கிறது. இந்த ஹெட்போனை சிறுவர்கள் மொபைல்கள், டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்கள், எம்பி3 மியூசிக் ப்ளேயர்கள் மற்றும் ஐபாட்கள் ஆகியவற்றில் மிக எளிதாக இணைத்துக் கொண்டு அருமையான இசையை ரசிக்கலாம்.

மேலும் இந்த ஹெட்போனில் ஆட்டோமேட்டிக் வால்யூம் ரிடக்சன் தொழில் நுட்பம் இருப்பதால் சிறுவர்கள் கேட்கக்கூடிய அதிக அளவு ஒலியான 85 டிபி அளவை வழங்குகிறது. ஆனால் அதற்காக இதன் இசை குறைவுபடுவதில்லை.

இந்த ஏரியல் ஹெட்போன் 4 மாடல்களில் வந்தாலும் இது இந்தியாவிற்கு வருமா என்றால் உறுதியாகக் கூற முடியாது. மேலும் இந்த ஹெட்போன் ஒரு இயற்கை சூழலைக் காக்கும் தொழில் நுட்பத்துடன் வருகிறது.

ஐகோவின் அதிகாரி ஒ நீல் கூறும் போது, இந்த ஏரியல்7 ஹெட்போன் பார்ப்பதற்கு விநோதமாக இருந்தாலும் குழந்தைகள் பாதுகாப்பாக இசை கேட்க பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறுகிறார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்