இன்டர்நெட் இணைப்புடன் ஓர் புதிய இசை சாதனம்!

சமீபத்தில் நடைபெற்ற எஸ்எக்ஸ்எஸ்டபுள்யு நிகழ்வில் மிசலு நெய்ரோ என்று மிகவும் மேம்படுத்தப்பட்ட சமூக இசை சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இது ஒரு ஆன்ட்ராய்டு சாதனம் ஆகும். மேலும் இது ஏராளமான அல்ட்ரா நவீன அப்ளிகேசன்களைக் கொண்டிருக்கிறது.
இந்த சமூக இசைச் சாதனத்தின் தொழில் நுட்பங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும். குறிப்பாக இந்த சாதனம் 2 ஆக்டேவ் வெலோசிட்டியைக் கொண்டிருக்கிறது. இதன் கீபோர்டு அழுத்தமான சென்சிட்டிவைத் தாங்கும் வலிமை கொண்டது. இதன் அகல திரை கப்பாசிட்டிவ் மல்டி டச் வசதி கொண்டது.
இந்த இசைச் சாதனத்தில் வைபை உள்ளதால் இதில் இன்டர்நெட் வேலைகளை மிக விரைவாகச் செய்ய முடியும். அடுத்தாக இதில் ப்ளூடூத் வசதி உள்ளதால் மிக வேகமகா தகவல்களைப் பரிமாற்றம் செய்ய முடியும். அதுபோல் சூப்பரான வெப்காமும் இந்த சாதனத்தில் உள்ளது. இதன் பேட்டரி 6 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.
இந்த இசைச் சாதனத்தில் உள்ள ஒலி அமைப்பு மிகவும் தரம் வாய்ந்த ஒன்றாகும். அதற்காக இந்த சாதனம் மிகத் தரமான ஆடியோ இன்புட் மற்றும் அவுட்புட் வசதிகளைக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் எம்ஐடிஐ இன்புட் அவுட்புட் வசதிகளும் உண்டு. இதிலிருக்கும் யுஎஸ்பி வசதியும் தகவல் பரிமாற்றத்திற்கு பேருதவி புரிகிறது.
மேலும் இந்த இசை சாதனத்தில் எச்டிஎம்ஐ, எஸ்டி கார்டு ஸ்லாட்டுகளும் உண்டு. அதுபோல் என்எஸ்எக்ஸ் டிஎஸ்பி சிப் வசதியும் உண்டு. மேலும் இசையை மேம்படுத்த ரெட்ரோநிம்ஸ் இசை அப்ளிகேசன்களும் உண்டு.
இந்த புதிய இசைச் சாதனத்தின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications