Home
Music

படம் பார்க்க, பாட்டு கேட்க புதிய மீடியா ப்ளேயர்!

By Karthikeyan
படம் பார்க்க, பாட்டு கேட்க புதிய மீடியா ப்ளேயர்!

சமீபத்தில் கவன் நிறுவனம் ஒரு புதிய கையடக்க ஆன்ட்ராய்டு மீடியா ப்ளேயரை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த மீடியா ப்ளேயருக்கு ப்ளேனு இஸட்2 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்த மீடியா ப்ளேயர் பல ஏராளமான தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக 116 கிராம் எடையுடன் வரு்ம இந்த மீடியா ப்ளேயர் 16ஜிபி மற்றும் 32ஜிபி அளவுகளில் வருகிறது. 800 x 480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 3.7 இன்ச் அளவு தொடு திரையைக் கொண்டிருக்கிறது.

அடுத்ததாக எச்டிஎம்ஐ அவுட்புட் கொண்டிருக்கிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டிருப்பதால் இதன் சேமிப்பை அதிகரிக்க முடியும். மேலும் இந்த மீடியா ப்ளேயர் எப்எம் ரேடியோ ட்யூனர், மைக்ரோபோன், ஆடியோ பில்டர்கள், காலண்டர், இமெயில், வெப் ப்ரவுசர், டிவிட்டர் அப்ளிகேசன் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் என சூப்பரான அம்சங்களைக் கொண்டுள்ளது.

இதன் பேட்டரி நீடித்து உழைக்கும் சக்தி கொண்டது. ஆன்ட்ராய்டு 2.3.5 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த மீடியா ப்ளேயர் ப்ளூடூத் வசதியும் கொண்டுள்ளது.

இந்த மீடியா ப்ளேயரில் இனிமையான இசையை இதமாக கேட்கலாம். இதன் பேட்டரி இதற்கு 22 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இந்த மீடியா ப்ளேயர் எல்லா வகையான ஆடியோ மற்றும் வீடியோ பைல் பார்மட்டுகளை சப்போர்ட் செய்யும். எனவே இதில் படம் பார்ப்பதும் அருமையாக இருக்கும்.

இந்த கவன் மீடியா ப்ளேயர் வரும் மே மாதத்தில் அமெரிக்காவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் 16ஜிபி மாடல் ரூ.14000க்கும் இதன் 32ஜிபி மாடல் ரூ.16000க்கும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X