புதிய போர்ட்டபுள் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தியது சோனி

Posted By: Staff

புதிய போர்ட்டபுள் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தியது சோனி
இசைப் பிரயர்களுக்காக சோனி நிறுவனம் மிகச் சிறிய ஆனால் மிகுந்த உயர்தரத்துடன் கூடிய ஒரு 360 டிகிரி ஸ்பீக்கரை உலகச் சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த வயரலஸ் ஸ்பீக்கரின் பெயர் சோனி எஸ்எ என்எஸ்300 ஆகும். இந்த ஸ்பீக்கரை லேப்டாப் மற்றும் நமது மொபைல்கள் மற்றும் எந்த டிஜிட்டல் டிவைஸ்களிலுமுள்ள ஆடியோ பைல்களை சப்போர்ட் செய்யும். இந்த ஸ்பீக்கர் ஹோம்ஷேர் நெட்வொர்க் ஸ்பீக்கர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஸ்பீக்கர் எந்தவித வயரும் இல்லாமல் நமது வீடு முழுவதும் மிக அருமையான இசையை வழங்கும். இந்த ஸ்பீக்கரை நாம் சோனி ப்ளூ-ரே டிஸ்க் ப்ளேயருடன் இணைத்தால் இதன் ஒலி அமைப்பு மிகத் தரமாக இருக்கும். இதன் 360 டிகிரி அம்சம் நமது வீடு முழுவதையும் இசையால் நிறைத்துவிடும். அடுத்ததாக இது ஒரு அடக்கமான டிவைஸ் ஆகும். இதை வீட்டின் எந்த இடத்திலும் பொருத்தி வைக்க முடியும். மேலும் இதை மிக எளிதாகவும் எடுத்துச் செல்ல முடியும்.

சோனி எஸ்எ என்எஸ்300 ஸ்பீக்கரின் தொழில் நுட்பங்களைப் பார்த்தால் இதன் எடை மிகவும் குறைவான எடையில் அதாவது 470 கிராமில் வருகிறது. இதன் பரப்பைப் பார்த்தால் அது 141 x 141 x 123 மிமீ ஆகும். இந்த ஸ்பீக்கரின் ப்ரீக்வன்சி 100 ஹெர்ட்ஸ் முதல் 20 கிலோ ஹெர்ட்ஸ் ஆகும். இதன் ஆம்ப்ளிபயர் 50/60 ஹெர்ட்ஸ் ப்ரீக்வன்சியை சப்போர்ட் செய்கிறது. இதற்கு தேவையான மின்திறன் 100 முதல் 240 விஎசி ஆகும். இந்த ஸ்பீக்கர் கருப்பு நிறத்தில் மிக அட்டகாசமாக வருகிறது.

மொத்தத்தில் இந்த ஸ்பீக்கரை பல புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட ஒரு நவீன இசைப் பேழை என்று அழைக்கலாம். சோனி எஸ்எ என்எஸ்300 ஸ்பீக்கர் வைபை ஐபோட் மற்றும் ஐபோன்களையும் சப்போர்ட் செய்யும். அதுபோல் நமது லேப்டாப் மற்றும் நமது மேசை கனிணியோடும் மிக எளிதாக இணைக்க முடியும்.

சோனி எஸ்எ என்எஸ்300 ஸ்பீக்கரின் விலையைப் பார்த்தால் அது ரூ.7500 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot