அதிரடி இசை வழங்கும் லோவே 3டி ஹோம் ஸ்பீக்கர்

Posted By: Staff

அதிரடி இசை வழங்கும் லோவே 3டி ஹோம் ஸ்பீக்கர்
லோவே நிறுவனம் ஆடியோ இசைப் பேழைகளை வழங்குவதில் முன்னனியில் இருக்கிறது. அதன் தயாரிப்புகள் அனைத்தும் நல்ல தரத்துடன் வந்து சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களை வாரி வழங்குகின்றன. இப்போது லோவே புதிதாக 3டி ப்ளூ-ரே ஹெம் சினிமா செட் ஸ்பீக்கர் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

இந்த டிவைஸ் நமது அறையில் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக இருக்கும் என நம்பலாம். மேலும் இந்த ஸ்பீக்கரை ஐபோடுகள் மற்றும் ஐபோன்களில் மிக எளிதாக இணைக்க முடியும். மேலும் இது சிடி மற்றும் டிவிடிக்களில் பொருந்தும் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இது ப்ளூ-ரே மற்றும் ப்ளூ-ரே 3டி வசதிகளை வழங்குகிறது.

லோவே 3டி ப்ளூ-ரே ஹோம் சினிமா செட் ஸ்பீக்கர் சிஸ்டத்தின் சிறப்பு என்னவென்றால் அது க்ரேஸ் நோட் கொண்டுள்ளது. அதன் மூலம் நாம் கேட்கும் பாடலைப் பற்றிய விவரத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். அந்த பாடலின் தலைப்பு, அதை இயற்றியவர் போன்ற அத்தனை விவரங்களையும் அறிய முடியும். இந்த க்ரேஸ் நோட் மூலம் மிக எளிதாக நமக்கு விருப்பமான பாடலை பல பாடல்களுக்கு நடுவே நாம் தேர்ந்தெடுக்க முடியும்.

லோவே 3டி ப்ளூ-ரே ஹோம் சினிமா செட் ஸ்பீக்கர் சிஸ்டம் பார்ப்பதற்கு மிக பக்காவாக அழகாக உள்ளது. குறிப்பாக நமது அறையிலேயே சிறப்பான இசையைக் கேட்க முடியும். மேலும் இதில் மீடியா விஷன் 3டி உள்ளது. இது அலுமினியம் சில்வர் மற்றும் கருப்பு நிறங்களில் வருகிறது. மேலும் இது ஒரு யூசர் ப்ரண்ட்லி டிவைஸ் ஆகும்.

லோவே 3டி ப்ளூ-ரே ஹோம் சினிமா செட் ஸ்பீக்கர் சிஸ்டம் துணை ஊபர்கள் மற்றும் சேட்டிலைட் ஸ்பீக்கர்கள் கொண்டு வருகிறது. இந்த 2 ஸ்பீக்கர்களும் அலுமினியம் மற்றும் கருப்பு நிறங்களில் பார்ப்பதற்கு மிக அட்டகாசமாக இருக்கிறது.

இதில் கஸ்டமைசேஷன் செய்வது மிகவும் எளிது. மேலும் இந்த ஸ்பீக்கர்கள் தரமான ஒலி அமைப்பையும் பேஸ் இசையையும் வழங்குகின்றன. லோவே 3டி ப்ளூ-ரே ஹோம் சினிமா செட் ஸ்பீக்கர் சிஸ்டத்தின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot