ஸ்கைப் வசதியுடன் இகோ வழங்கும் புதிய ஹெட்போன்கள்

வாக்மேன் சந்தைக்கு வந்தபின் ஹெட்போன்களின் வருகை தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. இவை மனிதனின் கவலைகள், சோகங்கள் ஆகியவற்றை சிறிது நேரம் மறக்கச் செய்யும் கருவிகளாக உள்ளன. தற்போது மொபைல் சிடி ப்ளேயர்கள், எம்பி3 ப்ளேயர்கள் மற்றும் ஐபோட் ஆகியவை இயர்போன்களைக் கொண்டு வருகின்றன.
மியூசிக் போன்கள், லேப்டாப்புகல் மற்றும் டேப்லட்டுகள் ஆகியவையும் இயர்போன்கள் கொண்டு வருகின்றன. இவ்வாறு பல ஆண்டுகளாக இந்த ஹெட்போன்கள் பிரபலமாகி வருவதால் மொபைல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஒலிப்பெருக்கி தயாரிப்பாளர்கள் பலவிதமான ஹெட்போன்களைத் தயாரித்து வழங்குகின்றனர்.
மொபைலுக்கான ஹெட்போன்களை வழங்கும் ஐகோ நிறுவனம் இங்கிலாந்து சந்தையில் கவர்ச்சிகரமான புதிய ஹெட்போன்களை வழங்கி வருகிறது. இந்த ஹெட்போன்கள் ஸ்கைப் அடாப்டர் மற்றும் மைக்ரோபோன் கொண்டு வருகின்றன.
இந்த ஐகோ ஹெட்போன்கள் ஐகோ மியாமி நடுத்தர ஸ்டீரியோ வெர்சன், த ஐகோ டெட்ராய்டு இன் இயர் இயர்பட் மாடல், ஐகோ சிட்டி ஓவர்-இயர் ஹெட்போன்கள், த ஐகோ மெம்பிஸ் ஓவர்-இயர் ஸ்டீரியோ மற்றும் நாய்ஸ் கேன்சலிங் ஹெட்செட் என்ற பல வகைகளில் வருகிறது.
ஐகோ சிட்டி ஓவர்-இயர் ஹெட்போன்கள் பார்ப்பதற்கு மிக அழகாக மற்றும் தனித்துவத்துடன் வெள்ளை என் சிவப்பு மற்றும் ப்ரவுன் என் தங்க நிறக் கலப்பில் வருகிறது. மேலும் இதை காதில் பொருத்துவதற்கும் மிக வசதியாக இருக்கிறது.
இந்த சிட்டி ஹெட்போன்களில் உள்ள வயர்களை மிக எளிதாக நீக்கிவிட முடியும் அதைப் பழுது பார்க்க முடியும். குறிப்பாக ஸ்கைப் அழைப்புகளுக்கு ஐகோ அடாப்டர் வழங்குவதால் இதை கனணி போர்ட்டுகளில் மிக எளிதாக இணைக்க முடியும். மேலும் நாம் விமானத்தில் பயணம் செய்யும் போதுகூட இந்த அடாப்டர் நன்றாக வேலை செய்யும்.
ஐகோ இந்த ஹெட்செட்டுகளில் இரைச்சல் தடுப்பு தொழில் நுட்பத்தை வழங்குகிறது. குறிப்பாக இந்த வசதி உயர்விலை ஹெட்செட்டுகளில்தான் இருக்கும். இந்த ஐகோவின் உயர்தர ஹெட்செட்டுகள் ரூ.7150க்கும் இதன் நடுத்தர ஹெட்செட்டுகள் ரூ.2500க்கும் இதன் மலிவு விலை ஹெட்செட்டுகள் ரூ.1250க்கும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications