ஐபோட், ஐபோனுக்கான புதிய மியூசிக் சிஸட்ம்: எச்கே அறிமுகம்

Posted By: Staff

ஐபோட், ஐபோனுக்கான புதிய மியூசிக் சிஸட்ம்: எச்கே அறிமுகம்
ஹார்மேன் கார்டன் புதிய ஐபோட் மியூசிக் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய சி்ஸ்டம் எசி/டிஜி ஐபோட்/ஐபோன் சிஸ்டம் வரிசையில் வரும் எனலாம். இந்த புதிய கெட்ஜட் புதிய ஆடியோ தொழில் நுட்பத்துடன் வருகிறது. இதில் இன்பில்ட் சிடி ப்ளேயர் மற்றும் தரமான ஒலியை வழங்கும் துணை ஊபரும் உள்ளன.

இந்த புதிய ஆடியோ சிஸ்டம் எம்எஸ் 150 என்று அழைக்கப்படுகிறது. இது 2 வாட் பேஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. குறிப்பாக இசைப் பிரியர்களுக்கும் இசைத் துறையில் இருப்பவர்களுக்கும் இந்த புதிய டிவைஸ் இசையை வாரி வழங்கும் என்பதில் ஐயமில்லை.

எம்எஸ் 150 சிறந்த தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஆர்டிஎஸ் தொழில் நுட்பத்துடன் கூடிய எப்எம் ட்யூனர் மற்றும் ஸ்டேஷன் சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. இதன் 7.3 இன்ச் சேசிஸ் அழகான வளைவு கொண்டு கருப்பு வண்ணத்தில் பளபளப்பாக கலையாக இருக்கிறது.

மேலும் இந்த டிவைஸ் 65ஹெர்ட்ஸ் முதல் 20கிஹெர்ட்ஸ் வரையிலான் ப்ரீக்வன்சிகளை எளிதாக எடுத்துக் கொள்ளும். இதன் சிக்னல் நாய்ஸ் ரேசியோ 75 டிபி ஆகும். மேலும் இதன் 3 எஸ் வசதி தரமான ஆடியோ மற்றும் வீடியோ மற்றும் எம்பி3/டபுள்யுஎம்எ-சிடி ப்ளேபக் போன்றவற்றை சப்போர்ட் செய்யும்.

எம்எஸ் 150 ஐஸ் கம்பாட்டிபுள் கொண்டு எல்லா விதமான ஆடியோ வசதிகளையும் வழங்குகிறது. இதில் யுஎஸ்பி பென்ட்ரைவையும் பயன்படுத்தலாம். எம்எஸ் 150 3 வரிசை டாட் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதேபோல் எப்எம் ஷ்டேசன் டிஸ்ப்ளேயையும் கொண்டிருக்கிறது.

மேலும் ஐஆர் ரிமோட் வசதியும் இதில் உண்டு. அதே போல் இதன் டிஸ்ப்ளேயை மங்கலாகவோ அல்லது மிக வெளிச்சமாகவோ மாற்ற முடியும். இது ஐரோப்பிய மின் திறனை கொண்டிருப்பதால் இதன் மின்திறன் ஸ்டேன்ட் பை மோடில் 1 வாட் ஆகும். இதன் விலையைப் பார்த்தால் ரூ.34000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot