Home
Music

குறைந்த விலையில் வரும் புதிய இன்ஸ்பான் யுஎஸ்பி ஸ்பீக்கர்கள்

By Super
குறைந்த விலையில் வரும் புதிய இன்ஸ்பான் யுஎஸ்பி ஸ்பீக்கர்கள்
மென்பொருள் மற்றும் மதர்போர்டு உள்ளிட்ட வன்பொருள் உற்பத்தியில் பெயர் பெற்ற இன்ஸ்பான் இன்போடெக் நிறுவனம் இப்போது யுஎஸ்பி ஒலிப்பெருக்கிகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதாவது ஜீனியஸ் 4 வாட் யுஎஸ்பி பவர் ஒலிப்பெருக்கிகளான எஸ்பி-யு150ஐ அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.

இந்த ஜீனியஸ் எஸ்பி-யு150 ஒலிப்பெருக்கிகள் யுஸ்பி போர்ட் மூலம் நோட்புக்குள் மற்றும் கனணிகளில் இணைத்தால் அது இயங்கும். இந்த ஒலிப்பெருக்கிகள் 4 வாட் மின்சாரத்தைக் கொண்டிருந்தாலும் இதன் 52எம்எம் ஒலிப்பெருக்கி தெளிவான துல்லியமான ஒலியை வழங்குகிறது. இதன் 3.5எம்எம் ஆடியோ ப்ளக்கை யுஎஸ்பி போர்ட் மூலம் ஆன் செய்தால் போதும் நாம் இனிய இசையைக் கேட்கலாம்.

ஜீனியஸ் எஸ்பி-யு150 ஒலிப்பெருக்கிகள் எக்ஸ்ட்ரா லைன் கொண்டிருப்பதால் இவற்றை சிடி/எம்பி3 அல்லது மொபைல் போன்களிலும் இணைக்க முடியும். தனியாக இசை கேட்க வேண்டுமானால் ஹெட்போனையும் இணைத்துக் கொள்ளலாம்.

இந்த ஒலிப்பெருக்கிகள் பார்ப்பதறகு பியானோவைப் போல் இருக்கும். மேலும் இதன் எடை மிக குறைவாக உள்ளது. இதன் ப்ரீக்வன்சி 180~20 கிலோ ஹர்ட்ஸ் ஆகும். மேலும் இது 85டிபி சிக்னல் நாய்ஸ் ரேசியோகொண்டிருப்பதால் இதில் இரைச்சல் இருக்காது.

ஜீனியஸ் எஸ்பி-யு150 ஒலிப்பெருக்கிகள் பல ஆபரேட்டிங் சிஸ்டங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக மைக்ரோசாப்ட் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் மேக் 10.0 போன்ற பலவற்றைக் கொண்டிருக்கின்றன. மேலும் இது அல்ட்ரா போர்ட்டபுளாக இருப்பதால் இதை எடுத்துச் செல்லும் போது ஒரு லேப்டாப் போன்று தெரியும். இந்த ஒலிப்பெருக்கிகள் 1 வருட உத்திரவாதத்துடன் ரூ. 750க்கு இந்தியாவில் கிடைக்கின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X