Home
Music

புதிய ஆடியோ சிஸ்டங்களை வெளியிட்டது யமஹா

By Super
புதிய ஆடியோ சிஸ்டங்களை வெளியிட்டது யமஹா
தரமான இசைக் கருவிகளுக்கு பெயர் பெற்றது யமாகா நிறுவனம் ஆகும். யமாகா இசை பேழைகள் தயாரிப்பிலும் ஆட்டோமேட்டிவ் துறையிலும் பல காலமாக கோலோச்சி வருகிறது. இப்போது யமாகா புதிதாக எம்சிஆர்232 மற்றும் எம்சிஆர் 332 என்ற 2 ஆடியோ சிஸ்டங்களை அறிமுகப்படுத்துகிறது.

இவை இரண்டும் முக்கியமாக பியானோ க்ராப்ட் மைக்ரோ கம்போனன்ட் சிஸ்டங்கள் ஆகும். இவை உயர்ந்த ஸ்டீரியோ ஒலி அமைப்பு கொண்டு அதிரடியான இசையை வழங்குகின்றன. இந்த 2 இசைப் பேழைகளையும் ஐபோடுகள் மற்றும் ஐபோன்களில் மிக எளிதாக இணைக்க முடியும். இவை இரண்டுமே ஏராளமான அம்சங்களையும் கொண்டு வருகின்றன.

எம்சிஆர்232 மற்றும் எம்சிஆர் 332 இரண்டுமே சிஆர்எக்ஸ்-332 சிடி ரிசிவர் கொண்டு வருகின்றன. இவை டிஜிட்டல் ஆம்ப் மற்றும் அலுமினியம் ஹேர்லைன் டிஸைன் கொண்டு 2 வழி பேஸ் ரிப்லக்ஸ் ஸ்பீக்கர்களுக்கு மெல்லிய அவுட்புட்டை வழங்குகின்றன.

இந்த 2 வழி ரிப்லக்ஸ் பேஸ் ஸ்பீக்கர்களையும் 3 கால்கள் சப்போர்ட் செய்கின்றன. அதுபோல் சிறந்த கேபினட்களும் இருக்கின்றன. இந்த ஸ்பீக்கர்கள் உயர்தர ரிசோனன்ட் பேஸ் வழங்குகிறது. அதனால் வெளிப்புற அதிர்வுகளிலிருந்து இந்த ஸ்பீக்கர்களைக் காக்கின்றன. இவை கருப்பு நிறத்தில் மிக அழகாக இருக்கின்றன.

எம்சிஆர்232 மற்றும் எம்சிஆர் 332 வைப்ரேசன் கண்ட்ரோல் கேபினட் தொழில் நுட்பத்தோடு வருவதால் இதில் அதிர்வுகள் இருக்காது. இதன் உச்சி டெர்மினல்கள் பெரியதாக இருப்பதால் இணைப்பு வழங்குவது மிக வசதியாக இருக்கும். மேலும் எம்சிஆர் 332 பனானா க்ளிப் இணைப்பையும் கொண்டுள்ளது.

அதனால் இதற்கு உத்திரவாதமும் கிடைக்கிறது. மேலும் இந்த 2 இசைப் பேழைகளுமே ரிமூவபுள் ஸ்பீக்கர் கிரில்களை கொண்டுள்ளன. இரண்டுமே ரிமோட் கண்ட்ரோல் கொண்டுள்ளன. இதன் மூலம் இந்த ஸ்பீக்கர்களை மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும். இரண்டிலும் டிஜிட்டல் இணைப்பு உள்ளதால் குறிப்பாக சிஆர்எக்ஸ்-332 டிஎசி உயர்தர ஒலியை வழங்குகிறது.

எம்சிஆர்232 மற்றும் எம்சிஆர் 332 ஆகிய இரண்டுமே யுஎஸ்பி போர்ட் உள்ளதால் இவை யுஎஸ்பி இணைப்பை மிக எளிதாக வழங்குகின்றன. இரண்டுமே எயுஎக்ஸ்-இன் டெர்மினல்கள் மற்றும் துணை ஊபர் போர்ட்டுகளும் கொண்டுள்ளன.

விலையைப் பொருத்தமட்டில் யமாகா எம்சிஆர்-332 ரூ.20000க்கும் யமாகா எம்சிஆர்-232 ரூ.17500க்கும் கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X