Home
Music

ஐபேடுக்கு புதிய வயர்லேஸ் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியது லாஜிடெக்

By Super
ஐபேடுக்கு புதிய வயர்லேஸ் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியது லாஜிடெக்
லாஜிடெக் நிறுவனம் புதியதாக ஒரு வயர்லெஸ் ஸ்பீக்கர் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த பூம்பாக்ஸை என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்பீக்கர் சிஸ்டத்தை ஐபேட் தவிர ஐபாட் டச் மற்றும் ஐபோன்களிலும் பயன்படுத்த முடியும்.

இந்த டிவைஸ் நடுத்தர அளவுடன் நிறைகுறைகளுடன் வருகிறது. குறிப்பாக இது எடுத்துச் செல்வதற்கு சற்று பெரியதாக இருக்கிறது. இந்த பூம்பாக்சின் சிறப்பு அம்சங்கள் மிக ஏராளமாக உள்ளன. அதாவது இது தரத்தில் மிக உயர்ந்து இருக்கிறது. இதன் பழைய வயர்லஸ் ஸ்பீக்கரை விட இது சற்று பெரியதாக இருக்கிறது.குறிப்பாக நமது பாதத்தைவிட பெரியதாக இருப்பதால் ப்ளூடூத் பார்களைவிட இந்த பூம்பாக்ஸ் பெரியதாக இருக்கிறது.

அதுபோல் இதன் ஒலி அமைப்பும் மிக அதிரடியாக இருக்கிறது. குறிப்பாக லாஜிடெக்கின் ஐபோன் மற்றும் ஐபோடுகளுக்கான போர்ட்டபுள் ஸ்டீரியோ டோக்குகளைவிட இந்த பூம்பாக்ஸ் மிகத் தரம் வாய்ந்ததாக இருக்கிறது.

லாஜிடெக்கின் இந்த வயர்லஸ் பூம்பாக்ஸை ஐபேட், ஐபோட் டச் மற்றும் ஐபோன்களோடு மட்டுமல்லாமல ப்ளூடூத் வசதி கொண்ட எந்த டிவைஸோடும் எளிதாக இணைக்க முடியும். குறிப்பாக வேலை செய்யும் போதும் அல்லது ஓய்வாக இருக்கும் போதும் இந்த டிவைஸை நமது கனிணி மற்றும் ஐபோடுகளில் இணைத்து நாம் இசையை ரசிக்க முடியும்.

இது சற்று பெரியதாக இருந்தாலும் இதை எடுத்துச் செல்லவும் முடியும். இதன் முக்கிய அம்சமே இதிலிருந்து வரும் சூப்பரான ஒலி அமைப்பாகும்.

லாஜிக் வயர்லஸ் பூம்பாக்ஸ் 6 மணி நேரம் தாங்கக்கூடிய 6 ரீஜார்ஜ் செய்யக் கூடிய பேட்டரிகளைக் கொண்டிருக்கிறது. இதன் வெளிப்புற ஹார்வேர்களும் மிக அருமையாக உள்ளன.

அதுபோல் இது துணை போர்ட் மற்றும் ஸ்டீரியோ கேபிளும் கொண்டுள்ளதால் இதை மிக எளிதாக ப்ளூடூத்தை சப்போர்ட் செய்யும் எந்த டிவைஸோடும் நேரடியாக இணைக்க முடியும்.

லாஜிடெக் ப்ளூடூத் பூம்பாக்ஸ் ஒரு உலகத் தரம் வாய்ந்த டிவைஸ் ஆகும். மேலும் தற்போது வந்திருக்கும் மற்ற டிவைஸ்களுக்கும் இது கடும் போட்டியைத் தரும் என்று நம்பலாம்.

இருந்தாலும் வைபை வயர்லஸ் இணைப்புடன் வரும் ஆப்பிளின் ஏர்ப்ளே சிஸ்டமும் இந்த பூம்பாக்சிற்கு போட்டியாக இருக்கும் என நம்பலாம். ஏனெனில் இந்த இரண்டின் விலையும் ஏறக்குறைய சமமாகவே இருக்கிறது.

ஆனால் இந்த பூம்பாக்ஸ் விலையில் சற்று குறைவாக இருக்கிறது. அதாவது இதன் விலை ரூ.7500 ஆகும். இப்போது அமெரிக்காவில் இந்த பூம்பாக்ஸ் கிடைக்கிறது. விரைவில் இந்தியாவிற்கு வரும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X