Home
Music

வீடியோ கேமிற்கும், இசை மழைக்கும் 2 புதிய ஹெட்செட்டுகள்

By Super
வீடியோ கேமிற்கும், இசை மழைக்கும் 2 புதிய ஹெட்செட்டுகள்
நீங்கள் ஒரு இசைப் பிரியராகவோ அல்லது வீடியோ கேம்களில் மோகம் கொண்டவராகவோ இருந்தால் உங்களின் ஆசைக்குத் தீணி போடுவதற்கு ஐப்ரோக்ஸின் ஹெட்செட்டுகள் வரவிருக்கின்றன.

ஆம் ஐப்ரோக்ஸ் நிறுவனம் புதிய ஐப்ரோக்ஸ் மொகுள்ஸ் மற்றும் ஐப்ரோக்ஸ் வெர்டெக்ஸ் என்ற 2 ஹெட்செட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த 2 ஹெட்செட்டுகளும் ஏராளமான வசதிகளை வாரி வழங்குகின்றன.

மொகுள்ஸ் ஹெட்போன் நெகிழ் தன்மை கொண்டது. இதன் தொழில் நுட்பங்களைப் பார்த்தால் இதன் ட்ரிவன் யுனிட் 50 எம்எம் மற்றும் 10-30,000ஹெர்ட்ஸ் ப்ரீக்வன்ஸி ரெஸ்பான்ஸ் கொண்டுள்ளது. இதன் கோர்ட் நீளம் 1.5மிமீ ஆகும். இதன் 50மிமீ ஸ்பீக்கர்கள் மிகத் தெளிவான தரமான அதிரடி இசையை வழங்குகிறது.

இதன் சூப்பர் டீப் பேஸ் ஒலி வீடியோ கேம் விளையாடும் போது மிகத் தரமான இசையை வழங்கும். இந்த மொகுள்ஸ் ஹெட்செட்டுகளை ஐபோன் மற்றும் ஐபேட் மற்றும் ப்ளாக்பெரி போன்றவற்றோடு இதன் 3.5எம்எம் ஜாக் மூலம் இணைக்க முடியும். மேலும் இதை மடித்து வைக்க முடியும்.

மேலும் வெர்டெக்ஸ் ஹெட்செட்டைப் பார்த்தால் அதுவும் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் எக்ஸ்ட்ராவாக பெரிய ஸ்பீக்கர் ட்ரைவர்கள் உள்ளன. அது சிறந்த ஆக்குவோஸ்டிக் ட்யூனிங்கை வழங்கும். மேலும் இது எடை குறைந்த மற்றும் அடக்கமான் டிவைஸ் ஆகும்.

அதுபோல் இதில் ஏரோபோம் குஷன்ஸ் உள்ளதால் இதில் காற்றோட்டம் மிக அம்சமாக இருக்கும். இதில் உள்ள மிக முக்கியமான சிறப்பு அம்சம் என்னவென்றால் அதன் மைக்ரோபோனாகும். அந்த மைக்ரோபோன் இன் லைன் தொழில் நுட்பம் கொண்டுள்ளதால் இதில் இன் டெப்த் டியூனிங் உள்ளது.

இந்த இரண்டு ஹெட்செட்டுகளுமே மற்ற ஹெட்செட்டுகளைப் போலவே இதர சிறப்புகளைக் கொண்டுள்ளன. இதில் ரொட்டேசனல் ஹின்சஸ் உள்ளதால் இதந்த ஹெட்போனை எளிதாக மடிக்க முடியும். அதுபோல் எளிதாக ரொட்டேட் செய்யவும் முடியும். மேலும் இதைப் பயன்படுத்துவோரின் தலையின் அளவுக்கு ஏற்றார் போல இந்த ஹெட்செட்டை குறைக்க முடியும் அல்லது நீட்ட முடியும்.

இந்த ஹெட்செட்டுகள் பல்வேறு காரணங்களைக் கொண்டுள்ளன. இவை மிக ஸ்டைலாக இருக்கின்றன. அதுபோல் பயணத்தின் போதும் மற்றும் நடந்து செல்லும் போதும் இதை தாராளமாக அணிந்து கொள்ளலாம். அதுபோல இதன் விலையும் மிக நியாயமாக உள்ளது. அதாவது மொகுள்ஸ் ஹெட்செட்டின் விலை ரூ,3500 ஆகும். அதுபோல் வெர்டெக்ஸின் விலை ரூ.2500 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X