Home
Music

ப்ளூடூத் டிவைஸ்களுக்கான சிறிய வெகோ 360 டிகிரி ஸ்பீக்கர்

By Super
ப்ளூடூத் டிவைஸ்களுக்கான சிறிய வெகோ 360 டிகிரி ஸ்பீக்கர்
நாம் இப்போது ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் காலத்தில் வாழ்கிறோம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவிற்கு புதிய புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் சிறப்பு என்னவென்றால் இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். ஆனால் இதிலிருந்து வரும் இசை அதிரடியாக இருக்கும். அப்படிப்பட்ட புதிய ஸ்பீக்கரை வெகோவின் 360 டிகிரி போர்ட்டபுள் ஸ்பீக்கர் என்ற பெயரில் வெகோ நிறுனம் அறிமுகப்படுத்துகிறது.

இந்த வெகோ 360 டிகிரி போர்ட்டபுள் ஸ்பீக்கர் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். அதை நமது பாக்கெட்டில் கூட எளிதாக வைத்துக் கொள்ளலாம். அதனால் குறிப்பாக சுற்றுலா அல்லது விருந்துகளின் போது இந்த ஸ்பீக்கர்களை நமது ஸ்மார்ட்போன்களோடு இணைத்துவிட்டால் போதும். நமக்கு விருப்பமான பாடல்களை தரமான ஒலி அமைப்பில் கேட்க முடியும். இந்த ஸ்பீக்கரின் உயரம் 50மிமீ ஆகும். மேலும் இதன் பரப்பு 40மிமீ ஆகும். மேலும் இது ரப்பரால் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கரின் மேலிருக்கும் சிறு துவாரங்கள் வழியாக ஒலி வெளியே வருகிறது.

வெகோவின் 360 டிகிரி போர்ட்டபுள் ஸ்பீக்கரின் இணைப்பு வசதியைப் பார்த்தால் மிக வசதியாக இருக்கும். அதாவது இதிலுள்ள இன்பில்ட் லித்தியம் ஐயன் பேட்டரியை மிக எளிதாக யுஎஸ்பி கேபிள் மூலம் குறைந்த நேரத்தில் ஜார்ஜ் செய்ய முடியும். இந்த பேட்டரி 3 மணி நேரம் தாங்கும் வலிமை கொண்டது.

வெகோவின் 360 டிகிரி போர்ட்டபுள் ஸ்பீக்கரை ஏதாவது ஒரு ஸ்மார்ட் போன் அல்லது ப்ளூடூத் டிவைஸோடு 15மீ தூரத்தில் இணைத்துவிட்டால் போதும் நாம் அருமையான இசையைக் கேட்க முடியும். அதுபோல் 3.5 எம்எம் ஜாக் கொண்ட எந்த டிவைசோடும் இந்த ஸ்பீக்கரை இணைக்க முடியும். அதுபோல் எல்லா ஐபோடுகள் மற்றும் ஐபோன்களோடும் இணைக்க முடியும். மேலும் இந்த ஸ்பீக்கர் 2.2 வாட்ஸை சப்போர்ட் செய்கிறது. இந்த ஸ்பீக்கரை ஒரு கூட்டத்தில் வைத்தால் கூட அது க்ரிஸ்டல் க்ளியர் ஒலியை வழங்கும் என்று வெகோ நிறுவனம் உத்திரவாதம் அளிக்கிறது.

வெகோவின் 360 டிகிரி போர்ட்டபுள் ஸ்பீக்கர் பல நல்ல வசதிகளைக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு சிறிய குறைபாடும் உள்ளது. அதாவது அதில் ஆட்டோ வால்யூம் கட்டுப்பாடு இல்லை. மேலும் இதன் ஜார்ஜ் செய்யக் கூடிய கேபிளும் ஒரு மினி யுஎஸ்பியாக இருப்பாதால் சற்று சிரமாமாக இருக்கிறது. இதன் விலையைப் பார்த்தால் இது ரூ.2900 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X