Home
Music

சோனி 3டி ஹெட்செட்: வீடியோ கேம் விளையாட்டில் ஓர் புதிய அனுபவம்

By Super
சோனி 3டி ஹெட்செட்: வீடியோ கேம் விளையாட்டில் ஓர் புதிய அனுபவம்
தற்போது சோனி நிறுவனம் தனது தயாரிப்புகளை 3டி தொழில் நுட்பத்தில் கொண்டு வருகிறது. இந்த புதிய தொழில் நுட்பம் வீடியோ கேம் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று சோனி நம்புகிறது. இந்த புதிய ஹெட்செட் தரமான விசுவல் எபக்ட்ஸ் மற்றும் தரமான ஒலி அமைப்பு வழங்கும்.

இந்த 3டி ஹெட்செட் வீடியோ கேம் பிரியர்களுக்காகவே வருகிறது. ஆனால் இதன் விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது. அதாவது இதன் விலை ரூ.38089 ஆகும். அதாவது ஜப்பானிய விலை மதிப்பில் 60000 என் ஆகும். அதனால் இதை வாங்குவதற்கு வாடிக்கையளர்கள் தயங்கலாம்.

சோனியின் இந்த புதிய 3டி ஹெட்செட்டின் பெயர் எச்எம்ஸட்-டி1 பெர்சனல் 3டி வியூவர் ஆகும். இது அதி நவீன தொழில் நுட்பத்தில் தயாராகிறது. கட்டிங் எட்ஜ் கொண்ட இந்த ஹெட்செட் நமது காது மற்றும் கண்களுக்கு மிக விருந்தாக அமையும். இந்த ஹெட்செட் நம்மை ஒரு தனி உலகத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும். இதன் மூலம் தனிப்பட்ட முறையில் சினிமாவும் பார்க்க முடியும்.

சோனியின் இந்த புதிய 3டி ஹெட்செட் 0.7 இன்ச் கொண்டு 1280x720 பிக்சல் ஒஎல்இடி பேனல் கொண்டுள்ளது. இதன் மூலம் 20 மீட்டர் தூரத்தில் 750 இன்ச் திரையில் படம் பார்ப்பது போல் இருக்கும். மேலும் இதில் சென்சரி அனுபவமும் உள்ளதால் இது 5.1 சரவுண்ட் சவுண்டை வழங்குகிறது.

இந்த ஒஎல்இடி திரையில் க்ரிஸ்டல் க்ளியர் வியூவிங் அனுபவத்தைத் தரும். அதுபோல் இதன் டிஸ்ப்ளேயில் ப்ளேஸ்டேசன் விட்டா தொழில் நுட்பமும் உள்ளது. அதுபோல் இந்த ஒஎல்இடி திரை அளவை நாம் நமது தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும். அதனால் இது கண்களை உருத்தாது.

இந்த சோனியின் 3டி ஹெட்செட் கேம்களுக்கும் மற்றும் படங்களுக்குமாக அகன்ற திரையைக் கொண்டுள்ளன. மேலும் இது 3டி வெர்ச்சுவல் போன் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளதால் சரவுண்ட் சவுண்டும் மிக அருமையாக உள்ளது. இதில் எல்லாவிதமான ஒலிகளும் மிக துல்லியமாக இருக்கும்.

இந்த 3டி ஹெட்செட்டை ஒரு பெர்பெக்ட் டிவைஸ் என்று கூறலாம். இதிலுள்ள எச்டிஎம்ஐ கேபிள் மூலம் 3டி கேம்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை பார்ப்பதற்கு புதிய அனுபவத்தைத் தரும்.

இவ்வளவு வசதிகளைக் கொண்ட இந்த சோனி 3டி ஹெட்செட்டின் விலை மட்டும்தான் சற்று அதிகமாக உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X