காதுகளுக்கு இதமான இசை தரும் ப்ளான்ட்ரோனிக்ஸ் எம்50 ஹெட்செட்

Posted By: Staff

காதுகளுக்கு இதமான இசை தரும் ப்ளான்ட்ரோனிக்ஸ் எம்50 ஹெட்செட்
ப்ளான்ட்ரோனிக்ஸ் எம்50 ஹெட்செட் ஸ்டைலாக, அடக்கமாக அதே நேரத்தில் நியாயமான விலையில் வருகிறது. இந்த இசைப் பேழை மேட் கருப்பு ப்ளாஸ்டிக்கில் பளபளக்கும் ஊதா இயர் ஹூக்குடன் வருகிறது. இதன் ஒரு பக்கம் பவர் பட்டனும் மறுபக்கத்தில் ஒலி கட்டுப்பாட்டு பட்டனும் உள்ளன.

இந்த ப்ளான்ட்ரோனிக்ஸ் எம்50 ஹெட்செட் நமது காதுகளில் கன கச்சிதமாகப் பொருந்தும். அதனால் பயணத்தின் போது இது காதிலிருந்து கீழே விழுந்துவிடுமோ என்ற பயம் தேவை இல்லை. இந்த இசைப் பேழையை நமது ஸ்மார்ட் போனில் இணைத்துவிட்டால் போதும். நாம் விரும்பிய இசையைக் கேட்க முடியும்.

மேலும் இந்த ப்ளான்ட்ரோனிக்ஸ் எம்50 ஹெட்செட் குயிக் பேர் தொழில் நுட்பம் கொண்டுள்ளதால் இதன் மின் திறன் மிக அருமையாக இருக்கும். இதில் பேசினாலும் இதன் பவர் பட்டன் மூலம் இதன் பேட்டரி ஆயுளை நாம் தக்கவைக்க முடியும். மேலும் இதன் பேட்டரி 16 மணி நேரம் தாங்கும் திறனைக் கொண்டுள்ளது.

பயனத்தின் போது காற்று நமது காதுகளில் ஒங்கி அடிக்கும். அப்போது மொபைலில் பேசினாலும் அது சரியாக கேட்காது. ஆனால் இந்த ப்ளான்ட்ரோனிக்ஸ் எம்50 ஹெட்செட்டை காதுகளில் பொருத்திவிட்டால் போதும். அத்தகைய தொந்தரவு இருக்காது. ஏனெனில் இதிலுள்ள டிஜிட்டல் சிக்னல் ப்ராசஸிங் வெளிப்புற சத்தங்களை அனுமதிக்காது. அதனால் பயனத்தின் போது எந்தவித தொந்தரவும் இருக்காது.

அடுத்த்தாக ப்ளான்ட்ரோனிக்ஸ் எம்50 ஹெட்செட் விஸ்பர்ட் ஸ்டேடஸ் அலர்ட் கொண்டுள்ளது. அதனால் இதை ஆன் ஆப் செய்வது மிக எளிதாக இருக்கிறது. மேலும் இதில் ப்ளூடூத் இணைப்பும் உள்ளது. குறிப்பாக இந்த ஹெட்செட்டின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இது நமது காதுகளில் மிகச் சரியாக பொருந்திவிடும்.இந்த ப்ளான்ட்ரோனிக்ஸ் எம்50 ஹெட்செட்டின் விலை ரூ.2500 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot