ஒரே நேரத்தில் 8 டிவைஸ்களோடு இணையும் புதிய இயர்போன்

Posted By: Staff

ஒரே நேரத்தில் 8 டிவைஸ்களோடு இணையும் புதிய இயர்போன்
தரமான இசை மற்றும் ஒலிப் பேழைகளின் தயாரிப்பில் பியாட்டன் நிறுவனம் முன்னனியில் இருக்கிறது. தற்போது பியாட்டன் பிஎஸ் 20 பிடி ப்ளூடூத் ஸ்டீரியோ இயர்போன்களை பியாட்டன் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த இயர்போன்கள் காதுகளில் பொருத்துவதற்கு மிக வசதியாகவும் அதே நேரத்தில் மிகத் தரமான இசையையும் வழங்குகின்றன. இந்த இயர்போனின் சிறப்பு என்னவென்றால் இதில் ப்ளூடூத் தொழில் நுட்பம் உள்ளது. அதன் மூலம் நமது காதுகளை இசையால் குளுமைப்படுத்துகிறது.

இந்த பியாட்டன் பிஎஸ் 20 பிடி ப்ளூடூத் ஸ்டீரியோ இயர்போன்களின் சிறப்புகளைப் பார்த்தால் நமக்கே மலைப்பாக இருக்கும். அந்த அளவிற்கு அது ஏராளமான வசதிகளை நமக்கு வழங்குகிறது. அதாவது இது ஒரு ஜோடி ப்ளூடூத் இயர் பட்ஸ்களுடன் வருகிறது. மேலும் இதன் பேட்டரியை ரீஜார்ஜ் செய்ய முடியும். அதுபோல் இது ப்ளூடூத் ப்ரொபைல் 3.0 கம்பாட்டிபிலிட்டியுடன் வருகிறது.

இந்த ஸ்பீக்கரிலுள்ள மிக முக்கிய அம்சம் என்னவென்றால் அது மேக்ஸ்பேஸ் வசதியைக் கொண்டிருக்கிறது. அதனால் இதில் காற்றோட்ட வசதி நன்றாக இருக்கும். அதுபோல் இது 10 மீட்டர் தூரத்தில் இயங்கும். இதிலுள்ள மைக்ரோபோனின் ப்ரீக்வன்சி 4000 ஹெர்ட்ஸ் வரை இருக்கும். இதன் எடை வெறும் 16 கிராம் மட்டுமே. அதனால் இதை எடுத்துச் செல்வது மிக எளிது.

பியாட்டன் பிஎஸ் 20 பிடி ப்ளூடூத் ஸ்டீரியோ இயர்போன்கள் 3 நிறங்களில் எல்இடி இண்டிகேட்டர்கள் கொண்டு வருகின்றன. அதன் மூலம் இந்த இயர்போன்களின் இயக்கத்தை அறிந்து கொள்ளலாம். ஒலி கட்டுப்பாட்டிற்காக ஒரு கட்டுப்பாட்டுக் குச்சியும் வழங்கப்படுகிறது.

அதுபோல் இதன் கட்டுப்பாட்டு பேடில் ஓவல் வடிவத்தில் ஒரு மைக்ரோபோன் இன்பில்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெட்போன் கோர்டுகள் 18 இன்ச் நீளம் கொண்டவை. மேலும் 14.36மிமீ ட்ரைவர்களும் இந்த டிவைஸில் உள்ளது. இந்த இயர்போன் ஒரு பட்டன் கொண்டு வரும் என்று தெரிகிறது. இந்த பட்டன் மூலம் இந்த டிவைஸை இயக்க முடியும். அதுபோல் இதில் ஆன் மற்றும் ஆப் செய்வதற்கான் பவர் பட்டனும் உண்டு.

பியாட்டன் பிஎஸ் 20 பிடி ப்ளூடூத் ஸ்டீரியோ இயர்போன்களை நமது உடைகளில் பொருத்திக் கொள்வதற்கு வசதியாக ஒரு க்ளிப்பும் கொண்டு வருகிறது. க்ளிப் வேண்டாதவர்களுக்கு க்ரே நிறத்தில் கழுத்து ஸ்டாப் வழங்கப்படுகிறது. அடுத்ததாக இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் இந்த இயர்போனை ஒரே நேரத்தில் 8 டிவைஸ்களோடு இணைக்க முடியும். இது 150எம்எஎச் லித்தியம் பாலிமர் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி 6 மணி நேர டாக் டைமையும் அதே நேரத்தில் 250 மணி நேர ஸ்டேண்டர்ட் பை டைமையும் கொண்டுள்ளது.

இந்த பியாட்டன் பிஎஸ் 20 பிடி ப்ளூடூத் ஸ்டீரியோ இயர்போன்களின் விலையைப் பார்த்தால் அது ரூ.7500 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot